முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் கறிவேப்பிலை தொக்கு.., எப்படி செய்வது?
கறிவேப்பிலை செரிமானத்தை மேம்படுத்த, உடல் எடையைக் குறைக்க, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும், இது முடி வளர்ச்சி, நரம்பு மண்டல ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
அந்தவகையில், உடலின் ஆரோக்கியத்திற்கு அருமையான கறிவேப்பிலை தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நல்லண்ணெய்- 5 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- பூண்டு- 6 பல்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- கடுகு- ½ ஸ்பூன்
- வெந்தயம்- ½ ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 15
- பெருங்காயம்- ¼ ஸ்பூன்
- தக்காளி- 3
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மிளகு தூள்- 1 ஸ்பூன்
- குழம்பு மசாலா- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- புளி- எலுமிச்சை அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின் இதில் தக்காளி, பெருங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த கலவையை சேர்த்து வதக்கவும்.
இதனைதொடர்ந்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, குழம்பு மசாலா சேர்த்து கிளறவும்.
பின்னர் இதில் புளி கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் இறக்கினால் சுவையான கறிவேப்பிலை தொக்கு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |