ஜம்மு காஷ்மீரில் பதற்றம்: 5 இந்திய ராணுவ வீரர்கள் பலி! விரையும் பாதுகாப்பு படையினர்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அருகில் உள்ள மலைகளில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவ வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாக்குதல்தாரிகளை தேடும் பணியை தொடங்கியுள்ளனர்.
தாக்குதலின் விவரம்
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை, தாக்குதல்தாரிகள் இராணுவ வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 5 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
கதுவா மாவட்டத்தில் ஒரு மாதத்திற்குள் இது இரண்டாவது பெரிய தாக்குதலாகும், மேலும் ஜம்முவில் ஜூன் மாதத்திலிருந்து பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் உயிரிழப்புக்கு ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தி குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |