பஹல்காம் தாக்குதல்; சுற்றுலா பயணிகளை காப்பாற்ற உயிர் நீத்த இஸ்லாமிய தொழிலாளி

India Jammu And Kashmir
By Karthikraja Apr 23, 2025 01:48 PM GMT
Report

 காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு இந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது.

கோடைக்காலத்தில் இந்த பகுதிக்கு, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

பஹல்காம் தாக்குதல்

இது போல், நேற்று சுற்றுலா வந்துள்ள பயணிகள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

pahalgam attack

இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. 

pahalgam attack

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, பயங்கரவாதிகள் மதம் பார்த்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்து என உறுதிப்படுத்திய பின்னர் துப்பாக்கியால் சுட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர். 

அதேவேளையில், இந்த தாக்குதலில் இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய தொழிலாளி

சையது அடில் ஹுசைன் ஷா(syed adil hussain shah) என்ற உள்ளூர் குதிரை சவாரி தொழிலாளி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் சுடப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தங்களை நம்பி வந்தவர்களை காப்பாற்ற நினைத்த அவர், தைரியாக சென்று பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.  

syed adil hussain shah

ஆனால் பயங்கரவாதிகள் அவரையும் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகளை தவிர்த்து கொல்லப்பட்ட ஒரே உள்ளூர் நபர் இவர்தான்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஹுசைன் ஷாவின் வருமானத்தை நம்பியே இருந்த அவரது வயதான தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தவிக்கும் குடும்பம்

இது குறித்து பேசிய ஹுசைன் ஷாவின் தந்தை சையது ஹைதர், "நேற்று எனது மகன் வழக்கம்போல் பஹல்காமிற்கு வேளைக்கு சென்றான். 3 மணிக்கு தாக்குதல் குறித்துக் எங்களுக்கு தகவல் வந்தது.

அப்போது அவனுக்கு அழைத்த போது அவனின் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மாலை 4.40 மணிக்கு, போன் ஆன் செய்யப்பட்டது. ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. 

syed adil hussain shah parents

அதன் பின்னர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்றோம். அப்போதுதான்பயங்கரவாத தாக்குதலில் என் மகன் கொல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கப்பெற வேண்டும்." என கூறினார்.

குதிரை சவாரியில் அவர் ஈட்டும் வருமானத்தில் தான் எங்களின் காலம் நகர்ந்துக்கொண்டிருந்தது. இப்போது எங்களை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. அவன் இல்லாமல் இனி நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என தெரியவில்லை." என அவரது தாய் கண்ணீர் மல்க கூறினார்.

ஆண்ட்ரியா

சையது அடில் ஹுசைன் ஷாவின் இறுதி சடங்கில், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேசிய உமர் அப்துல்லா, "நம்முடைய மாநிலத்தை சுற்றிப்பார்க்க வந்த விருந்தினர்கள், கெடு வாய்ப்பாக சவப்பெட்டிகளில் அனுப்பப்பட்டுள்ளனர். 

omar abdulla

தன்னுடைய வாழ்க்கைய சிரமத்திற்கு இடையே நடத்தி வந்த ஷாவின் உடல் சவப்பெட்டியில் வந்துள்ளது. வாழ்க்கை எப்படி இருந்தாலும் அவரது இறப்பு சாதாரணமானதாக இல்லை. துணிச்சலுடன், தாக்குதலை தடுக்க முயற்சித்திருக்கிறார். அவரது குடும்பத்தை நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம்” என கூறினார். 

நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவும், "நமது நாடு மத ரீதியாக அதிகம் பிரிந்து அணி திரட்டப்படும் ஒரு சூழலில் ஒரு குறிப்பிட்ட மதம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பை திசை திருப்பாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை என பஹல்காம் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US