இத பாருங்க எப்படி இருக்குன்னு! நிருபராக மாறிய சிறுமியின் வீடியோ
இந்தியாவின் காஷ்மீரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நிருபராக மாறி சாலையின் அவலத்தை எடுத்துக்கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இங்குள்ள மக்கள் பொறுப்பின்றி குப்பைகளை கொட்டுகின்றனர், சாலையும் சேறும், சகதியுமாக இருக்கிறது.
இதனால் யாரும் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை என கவலையுடன் தெரிவிக்கிறார், ஒரு நிருபரைப் போல் ஒவ்வொரு குறைகளாக எடுத்துக் கூறி சிறுமி பேசியிருப்பது பலரையும் ஈர்த்து வருகிறது.
இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளார்.
அதேபோல் விரைவில் சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Meet Youngest reporter from the #Kashmir Valley. pic.twitter.com/4H6mYkiDiI
— Sajid Yousuf Shah (@TheSkandar) January 9, 2022