காசி ஆனந்த பவனம் பற்றி தெரியுமா? விபரம் இதோ

Tenkasi
By Yashini Aug 14, 2023 07:48 AM GMT
Report

இந்தியாவில் புண்ணியஸ்தலங்களில் தலைமை இடமாக உள்ளது காசி. கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசித்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கி பிறப்பு இறப்பு இல்லாத முக்தி நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

kasi/காசி

முக்தி தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் காசியில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

காசி முக்தி தளத்தை பற்றி நாம் அனைவருக்கும் தெரியும், ஆனால் காசி விஸ்வநாதருக்கு நடக்கப்படும் சிறப்பு பூஜைகளை பற்றி யாருக்கும் தெரியாது.

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடக்கும் சில வகை பூஜைகளில் கலந்துகொண்டால் நாம் நினைத்து வேண்டியது அனைத்தும் நடக்கும் மேலும் புண்ணியங்களும் வந்தடையும்.

காசி விஸ்வநாதர் ஆனந்த பவனம்

காசியில் விஸ்வநாதர் வீற்றிருக்கும் கருவறையை ஆனந்த பவனம் என்று அழைப்பார்கள். இது பலரும் தெரியாத விஷயமாகும். ஆனந்த பவனம் என பெயர் ஏற்படுவதற்கு இங்கு தினமும் மாலையில் நடக்கும் சப்தரிஷி பூஜையே காரணம்.

காசியில் விஸ்வநாதருக்கு செய்யப்படும் பூஜைகளிலே விசேஷமான பூஜை இந்த சப்தரிஷி பூஜை தான். அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கெளதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி ஆகிய ஏழு முனிவர்களும் சப்தரிஷிகள் என போற்றப்படுகிறவர்கள்.

sabtharishi poojai/​சப்தரிஷி பூஜை

இந்த ஏழு முனிவர்களும் தினமும் மலையில் காசி விஸ்வநாதரை தரிசிக்க வருவதை ஐதீகம்.

​சப்தரிஷி பூஜை

காசியில், சிவனை நோக்கி தவமிருந்து, சப்தரிஷி மண்டலத்தில் வசிக்கும் பெரும் பேறு பெற்றவர்கள். வானியல் சாஸ்திரப்படி சனி பகவானின் உலகிற்கு வடக்கே சப்தரிஷி மண்டலம் அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அங்கிருந்து இவர்கள் தினமும் காசிக்கு வந்து விஸ்வநாதரை சப்த ரிஷிகளும் பூஜிப்பதாக ஐதீகம்.

தினமும் காலை 7 மணி முதல் 08.30 வரை நடைபெறும் பூஜையில் 7 அர்ச்சகர்கள் விஸ்வநாதரை சுற்றி அமர்ந்து பூஜை செய்வார்கள்.

sabtharishi poojai/​சப்தரிஷி பூஜை

அப்போது ராம நாமம் எழுதப்பட்ட வில்வ இலைகளால் அர்ச்சித்த படி, சிவபெருமானுக்குரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் பாடப்படும். இந்த பூஜை முடிந்த பிறகு விஸ்வநாதருக்கு அபிஷேகம் நடைபெற்று நாகாபரணம், வெள்ளிக் குடை அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்படும். அதைத் தொடர்ந்து உடுக்கை அடித்து பைரவருக்கு பூஜை நடைபெறும்.

அதற்கு பிறகு தான் பக்தர்கள், விஸ்வநாதரை தொட்டு வணங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனந்தத்தில் காசி விஸ்வநாதர்

சப்தரிஷி பூஜை தினமும் நடைபெறுவதால் காசியில் விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் இருப்பதாக ஐதீகம். இதனால் காசிக்கு விஸ்வநாதர் ஆலயத்திற்கு பிறகு ஆனந்த பவனம் என்ற பெயரும் உள்ளது.

வெள்ளித் தகடு பதித்த கொட்டியில் தங்க ஆவுடையார் மீது விஸ்வநாதர் எழுந்தருளி உள்ளார்.

kasi vishvanathar/காசி விஸ்வநாதர்

சிவனின் அடி முடியை காண பிரம்ம தேவரும், திருமாலும் புறப்பட்ட போது அவர்களின் ஆணவத்தை ஈசன் அழித்த இடம் காசி என சொல்லப்படுகிறது. அதனால் இந்த தலத்திற்கு மகா மயானம் என்றும் பெயர். கோவிலின் பின்புறம் ஆதி விஸ்வநாதர் சன்னதியும் உள்ளது.

யாருக்கெல்லாம் முக்தி கிடைக்கும் ?

காசிக்கு வரும் அனைவருக்கும் பாவங்கள் நீங்கி முக்தி கிடைத்து விடும் என பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த தலத்திற்கு வந்து, காசி விஸ்வநாதரை தரிசிக்கும் போது, இறைவனை தரிசிக்கும் மிகப் பெரிய பாக்கியம் கிடைத்ததே போதும். இறைவனின் அருள் ஒன்றை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்ற எண்ணம் எவர் ஒருவருக்கு ஆத்மார்த்தமாக ஏற்படுகிறதோ அவர்களுக்கு மட்டுமே அரிதான முக்தி கிடைக்கும். 

kasi vishvanathar/காசி விஸ்வநாதர்  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


  

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US