சுரேஷ் ரெய்னாவை CSK ஏலத்தில் எடுக்காததற்கு காரணம் இதுதான்! உண்மையை உடைத்த காசி விஸ்வநாதன்
ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எடுக்காதது தொடர்பில் அணியின் சி இ ஓ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். ஐபிஎல் மெகா ஏலத்தின் போது சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே உட்பட எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.
சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் ரசிகர்கள் சிஎஸ்கே அணி மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் சிஎஸ்கே யூடியூப் பக்கத்தில் அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் ஐபிஎல் ஏலத்தின் நிகழ்வுகள் குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், சிஎஸ்கே அணியில் கடந்த 12 ஆண்டுகளாக சுரேஷ் ரெய்னா ஒரு நிலையான வீரராக இருந்து வந்தார். ரெய்னா அணியில் இல்லை என்பது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் அணியின் அமைப்பு என்பது எந்த அணியை வைத்திருக்க விரும்புகிறதோ அந்த அணியின் வடிவம் மற்றும் வகையைப் பொறுத்தது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர் இந்த அணிக்கு பொருந்தமாட்டார் என்று நினைத்தேன் என்றுள்ளார். மேலும் டூ பிளெசியை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளாக எங்களுடன் இருந்த அவரை நாங்கள் இழந்து உள்ளோம். இது ஏலத்தின் செயல்முறை மற்றும் நடைமுறையை பொறுத்தது என விளக்கமளித்துள்ளார்.