காஷ்மீரில் நடந்தது கோழைத்தனமான இழிவான வன்முறை செயல்: விஜய் கண்டனம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜய் கண்டனம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், "ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் உள்ளிட்ட அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. இந்த கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |