வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை? நயன்தாரா-விக்னேஷ் சிவனை மறைமுகமாக கண்டித்த பிரபல நடிகை
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது இந்திய சட்டப்படி குற்றம் என்று கூறப்படுகிறது
இந்தியாவில் மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர, வாடகைத் தாய் முறை செய்யப்பட்டுள்ளது - நடிகை கஸ்தூரி
நயன்தாரா - விக்னேஷ்சிவன் தம்பதி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பிரபல நடிகை கஸ்தூரி மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
நட்சத்திர தம்பதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, இந்த ஜோடிக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றது இந்திய சட்டப்படி குற்றம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி, நட்சத்திர தம்பதிக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்தியாவில் மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர, வாடகைத் தாய் முறை செய்யப்பட்டுள்ளது. இது சனவரி 2022 முதல் அமுலுக்கு வந்த சட்டம். அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது மற்றோரு பதிவில், 'ஒரு வழக்கறிஞராக தகுதி பெற்ற ஒருவர் என்ற முறையில், எனது வணிகத்தை மனதில் கொள்ளச் சொல்லும் அனைவருக்கும், நான் சில சட்டப் பகுப்பாய்வைக் கணக்கிடுகிறேன். மேலும் விவாதிக்கப்படும் பிரச்சனையைப் போல் அல்லாமல், எனது கருத்துக்கள் முற்றிலும் நற்பண்பு மிக்கதாகவும், வணிக ரீதியாகவும் அல்லாமல் மற்றும் தகுதி பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் கொடுக்கப்பட்டுள்ளன' என தெரிவித்துள்ளார்.
Surrogacy is banned in India
— Kasturi Shankar (@KasthuriShankar) October 9, 2022
except for medically inevitable reasons. This is the law from Jan 2022.
We are going to be hearing a lot about this for next several days.