வனிதாவை பாத்து இன்னொரு கல்யாணம்னு நினைக்கறது சரி! ஆனா... ரசிகர் கேள்விக்கு நடிகை கஸ்தூரி பதிலடி
வனிதாவும், பவர் ஸ்டாரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் குறித்து கஸ்தூரியிடம் கருத்து கேட்ட ரசிகருக்கு தனது பாணியில் அவர் பதில் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.
பின்னர் அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது.
இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் நடிகை வனிதா, தனது ட்விட்டர் பக்கத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், and 4 ஹார்ட்டின்கள் உடன் பவர் ஸ்டார் சீனிவாசனை டேக் செய்துள்ளார். வனிதாவும் பவர் ஸ்டார் சீனிவாசனும் கழுத்தில் மாலையுடன் இருக்கிற புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ரசிகர்கள் பலரும் அவர்கள் திருமணம் செய்துகொண்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில், சிலர் வனிதா – பவர் ஸ்டார் சீனிவாசன் திருமணம் நிஜமா, இல்லை ஏதேனும் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படமா என்று நம்ப முடியாமல் சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை நடிகை கஸ்தூரிக்கு டுவிட்டரில் டேக் செய்த ஒருவர், ஏன் இது குறித்து இந்த முறை பேசாமல் மெளனம் காக்கிறீர்கள் வனிதாவுக்கு பயமா என கேட்டார்.
அதற்கு பதிலளித்த கஸ்தூரி,ஷப்பா என்னா பொறுப்புணர்ச்சி நம்ம மக்களுக்கு. வனிதாவை பாத்து இன்னொரு கல்யாணம்னு நினைக்கறது சரி... பவர் ஸ்டார் ஐ பாத்ததும் புரியலையா இது எதோ சினிமா ன்னு ? போயி புள்ளகுட்டிங்களை படிக்க வையி மேன்!