உடல் எடையை குறைக்கும் கசூரி மேத்தி இலைகள்
Weight Loss
By Kirthiga
பொதுவாகவே உடல் எடையானது அதிகமாக இருக்கும் பெண்கள் தங்களது உடலை மெலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதற்காக கூடிய கவனம் எடுத்து ஒவ்வொரு விடயத்தையும் செய்வதுண்டு. அதில் ஒன்று தான் சந்தைகளில் கிடைக்கும் பல்வேறு ஊட்டச்சத்து பவுடர்களை சாப்பிடுவதாகும்.
ஆனால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சமையல் பொருட்களிலும் உடல் எடையை குறைக்கும் மகிமை இருக்கிறது என்று கூறினால் நம்புவீர்களா?
ஆம். அது உண்மை தான். சமையலுக்காக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன.
அந்தவகையில் கசூரி மேத்தி எப்படி உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
உடல் எடையை குறைக்கும் கசூரி மேத்தி
-
ஒரு தேக்கரண்டி கசூரி மேத்தியில் 20 கலோரிகள் உள்ளன. இதை எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறையும்.
- கசூரி மேத்தியில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது. இது பசி எடுப்பதை தடுக்கும்.
- கசூரி மேத்தியில் நறுமண சுவை உள்ளது. இது பல்வேறு உணவுகளின் சுவையை அதிகரிக்கும்.
- அதிகமாக கொழுப்பு நிறைந்து இருக்கும் உணவில் இதை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் கொழுப்பானது உடலில் தங்காது.
- கசூரி மேத்தி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். எனவே பசியை கட்டுப்படுத்தி கலோரி உட்கொள்வதை குறைக்கும்.
- உப்புசம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை போக்கும். ஆரோக்கியமான குடல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை வழங்கும்.
- கசூரி மேத்தியில் உடலைப் பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் எடையை குறைக்கவும் உதவும்.
- எடை இழப்புக்கு சீரான உணவு, வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் என்பவை அவசியமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US