Delivery Boy-யை காரை ஏற்றிக்கொன்ற தம்பதி: திடுக்கிட வைக்கும் சம்பவம்
பெங்களூரு டெலிவரி ஏஜென்ட் மீது வேண்டுமென்றே காரால் மோதி கொலை செய்த களரி பயிற்சி ஆசிரியர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு டெலிவரி மீது கார் மோதல்
அக்டோபர் 25ம் திகதி கெம்பட்டள்ளியைச் சேர்ந்த டெலிவரி ஏஜெண்டான தர்ஷன்(24) என்பவர் மீது கேரளாவை சேர்ந்த களரி பயிற்சியாளர் மனோஜ் குமார்(32) மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அவரது மனைவி ஆரத்தி ஷர்மா(30) ஆகிய இருவரும் வேண்டுமென்றே கார் ஏற்றிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் நடராஜா லே அவுட் பகுதியில் தர்ஷனின் ஸ்கூட்டர் தம்பதியின் கார் மீது லேசாக மோதியதை அடுத்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவத்தின் போது தர்ஷனின் ஸ்கூட்டர் இடித்ததில் களரி பயிற்சியாளர் மனோஜ் குமார் காரின் பின்புறத்தில் இருந்த கண்ணாடி சிறிதாக சேதமடைந்துள்ளது, இதையடுத்து அங்கேயே தர்ஷன் மன்னிப்பு கேட்டுவிட்டு தன்னுடைய டெலிவரியை முடிப்பதற்காக வேகமாக அங்கிருந்து சென்றுள்ளார்.
ஆனால் ஆத்திரத்தில் இருந்த களரி பயிற்சியாளர் மனோஜ் குமார் தன்னுடைய காரை யூ-டர்ன் எடுத்து வேகமாக தர்ஷனை பின் தொடர்ந்து சென்று தர்ஷனின் ஸ்கூட்டரை பலமாக மோதியுள்ளார்.
பசிபிக் கடலில் அமெரிக்கா நடத்திய உயிர்க்கொல்லி தாக்குதல்: தீப்பிடித்து எறிந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல்
இந்த கார் மோதலில் தர்ஷனும் அவருடைய நண்பர் வருணும் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி விசப்பட்டனர். இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் தர்ஷன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தம்பதியினர் கைது

இந்த கார் மோதல் சம்பவத்தை தொடர்ந்து களரி பயிற்சியாளர் மனோஜ் குமார்(32) மற்றும் அவரது மனைவி ஆரத்தி ஷர்மா(30) ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரின் உடைந்த பாகங்களை எடுக்கும் போது மட்டுமே மனைவி உடனிருந்து உதவியதாகவும், தர்ஷனை காரால் மோதிய போது தான் தனியாகவே இருந்ததாக களரி பயிற்சியாளர் மனோஜ் குமார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் தம்பதியினர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு இருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |