மகாராணி எலிசபெத்தை பார்க்காத கேத் மிடில்டன் மற்றும் மேகன் மார்க்கல்? வெடித்த சர்ச்சை
கேத் மிடில்டன் மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார்கள் என தகவல்
ஹாரி மற்றும் மேகன் இருவரும் எலிசபெத்தை காண புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஹாரி மட்டும் சென்றுள்ளார்
ராணி எலிசபெத் உடல்நிலை குறித்து தகவல் அறிந்து அவரை காண கேத் மிடில்டன் - மேகன் மார்க்கல் செல்லாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் கிடைத்ததும் அரச குடும்பத்தினர் பால்மோரல் அரண்மனைக்கு சென்றனர். ஆனால் கேத் மிடில்டன் மற்றும் மேகன் மார்க்கல் உடனே மகாராணியை காண செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
வில்லியம் ஸ்கொட்லாந்து புறப்பட்டு சென்றபோது, கேத் மிடில்டன் தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர செல்லும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதேபோல் அரச குடும்பத்திற்கும் மேகன் மார்க்கலுக்கும் சுமூகமான நல்லுறவு இல்லை என்பதால், அவரை வரவேற்க அரச குடும்பத்தினர் விரும்பமாட்டார்கள், எனவே அவர் ஹாரியுடன் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
MAX MUMBY/INDIGO/GETTY IMAGES
மேலும், ஹாரி மற்றும் மேகன் இருவரும் எலிசபெத்தை காண புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஹாரி மட்டும் சென்றுள்ளார். அப்போது மேகன் மார்க்கல் Windsor-யில் கேத் மிடில்டனுடன் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஹாரியுடன் ஏன் ஸ்கொட்லாந்துக்கு மேகன் செல்லவில்லை என்பதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில் ஹாரி - மேகன் நடத்தி வரும் தங்கள் தொண்டு நிறுவனத்தின் வலைதள பக்கத்தின் நிறத்தை கருப்பு நிறமாக மாற்றி In Loving Memory of Her Majesty Queen Elizabeth II 1926 - 2022 என குறிப்பிட்டுள்ளனர்.
Anwar Hussein/WireImage
இந்த நிலையில், கேத் மிடில்டன் மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு மற்றும் அதற்கு முன்பாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பார்கள் எனவும், அவர்களது பயண திட்டம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எப்போது ஸ்கொட்லாந்துக்கு பயணிப்பார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.