அனுமதி மறுத்துவிட்டு மேகன் மீது அபாண்டமாக பழி சுமத்தும் கேட் மிடில்டன்: வெளிவரும் பின்னணி
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமான கடந்த செப்டம்பர் மாதம் மேகன் மெர்க்கலுக்கும் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்குமான பனிப்போர் இறுதிகட்டத்தை எட்டியதாக புதிய நூல் ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கேட் மிடில்டன் கடும் விமர்சனம்
ராணியார் எலிசபெத்தின் இறுதி நிமிடங்களில் மேகன் மெர்க்கல் உரிய மரியாதை செலுத்தவில்லை என கேட் மிடில்டன் கடும் விமர்சனம் முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது.
@getty
ஆனால், ராணியார் காலமான தகவல் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டதும், இளவரசர் ஹரியும் அவர் மனைவி மேகன் மெர்க்கலும் ஸ்கொட்லாந்து பயணப்படாமல் இருக்கவே, கேட் மிடில்டன் ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் தங்கியிருந்தார் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இதனாலையே, ஹரி புறப்பட தாமதமானதும், கடைசி நேரத்தில் தனியாக புறப்படும் கட்டாயத்திற்கு ஹரி தள்ளப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் கேட் மிடில்டன் மற்றும் மேகன் மெர்க்கலை ராணியாரின் மரணப்படுக்கை அருகாமையில் செல்ல வேண்டாம் என மன்னர் சார்லஸ் கூறியுள்ளார்.
அதேவேளை, வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஸ்கொட்லாந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். இந்த நிலையில் தமது மனைவியும் ராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டும் என ஹரி கட்டாயப்படுத்தியுள்ளார்.
மன்னரின் பேச்சை கேட் மதிக்கவில்லை
இதற்கு பதிலளித்த சார்லஸ் மன்னர், ராணியுடன் இருப்பதற்கு குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி என கூறியுள்ளார். வில்லியத்திடமும் கண்டிப்புடன் கேட் மிடில்டனை அழைத்துச் செல்ல வேண்டாம் என சார்லஸ் மன்னர் கூறியுள்ளார்.
கேட் பால்மோரல் மாளிகைக்கு செல்லவில்லை என்றால் மேகன் மெர்க்கலும் செல்ல வாய்ப்பில்லை என சார்லஸ் தமது மகனிடம் கூறியுள்ளார். மட்டுமின்றி, தனியாக புறப்பட்டால் போதும் என ஹரியிடம் மன்னர் சார்லஸ் குறிப்பிட்டதும், மேகன் மெர்க்கலை இங்கிலாந்தில் விட்டுவிட்டு பயணப்பட வேண்டும் என்பதை குறிப்பிடவே எனவும் அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் மன்னரின் பேச்சை கேட் மிடில்டன் மதிக்கவில்லை எனவும், இறுதியில் ராணியாருக்கு மரியாதை செலுத்த தவறிவிட்டார் என அபாண்டமான பழியை மேகன் மீது சுமத்தியுள்ளார் தற்போதைய வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்.