வின்ட்சர் கோட்டையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்., குட்டி இளவரசியுடன் பியானோ வாசித்து அசத்திய கேட்
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மற்றும் அவரது 10 வயது மகள் சார்லட், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் இணைந்து பியானோ வாசித்த தருணம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
‘Together at Christmas’ என்ற கிறிஸ்துமஸ் கரோல் கச்சேரி, ITV1 மற்றும் ITVX சேனல்களில் கிறிஸ்துமஸ் ஈவ் (புதன்கிழமை) அன்று ஒளிபரப்பப்பட்டது.
கேட் மற்றும் சார்லட் இணைந்து, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் எர்லாண்ட் கூப்பர் எழுதிய Holm Sound என்ற பாடலை வாசித்தனர்.
இந்த நிகழ்ச்சி, வின்ட்சர் கோட்டையின் உட்புற அவையில் (Inner Hall) பதிவு செய்யப்பட்டது. எர்லாண்ட் கூப்பர் நேரடியாக பங்கேற்று, இசை நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

அரச குடும்ப ரசிகர்களின் பாராட்டு
“அற்புதமான தருணம், கண்களில் கண்ணீர் வரவைத்தது” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
“சார்லட்டைப் பார்த்து கேட் பெருமையாக இருந்தார்” என பலர் குறிப்பிட்டனர்.
இளவரசர் வில்லியம், தனது மனைவி மற்றும் மகளின் நிகழ்ச்சியைப் பார்த்து மிகுந்த பெருமை அடைந்திருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கூடுதல் நிகழ்ச்சிகள்
கச்சேரியில், இளவரசர் வில்லியம் பைபிளின் புதிய ஏற்பாட்டில் இருந்து லூக்கா நற்செய்தியின் இரண்டாவது அத்தியாயத்தை வாசித்தார்.
நடிகை கேட் விண்ஸ்லெட் மற்றும் ஹன்னா வாடிங்ஹாம், பாடகர்கள் கேட்டி மெலுவா, டான் ஸ்மித், Griff ஆகியோர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Westminster Abbey Choir பாரம்பரிய கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Kate Middleton Princess Charlotte piano duet Christmas concert, Royal family Christmas carol service Westminster Abbey ITV broadcast, Together at Christmas concert Kate proud of daughter Charlotte, Holm Sound Erland Cooper performance Windsor Castle recording, Prince William Bible reading Luke Gospel carol service 2025, Kate Winslet Hannah Waddingham Katie Melua Christmas readings songs, Royal fans reaction emotional piano performance mother daughter bond, Princess Charlotte blue dress Kate emerald outfit festive look, UK royal Christmas traditions carol concert highlights, Kate Middleton past piano performances 2021 Westminster Abbey