கேட் மிடில்டன் முன்னெடுக்கும் கீமோ சிகிச்சையின் நிலைகள் என்ன... வெளிப்படுத்தும் நிபுணர்
புற்றுநோய் பாதிப்பு குறித்து அறிவித்த கேட் மிடில்டன், கீமோ சிகிச்சை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில், அதன் நிலைகள் குறித்து நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
கீமோதெரபி சிகிச்சை
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் சமீபத்தில் பொதுமக்களுக்கு அறிவித்த தகவலில், தாம் கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தினார். ஜனவரி மாதம் முன்னெடுக்கப்பட்ட வயிற்றுக்கான அறுவை சிகிச்சையின் போது புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கேட் மிடில்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையிலேயே மருத்துவ நிபுணர் Jane Kirby, கீமோ சிகிச்சையின் தாக்கம் குறித்தும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பது தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.
அதில், தற்போதுள்ள புற்றுநோய் செல்களை அழிப்பதன் மூலம் கீமோதெரபி செயல்படுகிறது மற்றும் நோய் மீண்டும் வருவதை தடுக்க உதவுகிறது என்றார். கீமோதெரபி சிகிச்சையில் பலவகை உள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன்னரோ அல்லது பின்னரோ கீமோ சிகிச்சை முன்னெடுக்கலாம்.
மேலும், புற்றுநோய் செல்களை மொத்தமாக அகற்றியதாக மருத்துவர்கள் நம்பும் நிலையிலும் கீமோ பரிந்துறைக்கப்படலாம். அது மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவும். புற்றுநோயின் தன்மையை கருத்தில் கொண்டே, சிகிச்சை எவ்வளவு காலம் என்பது முடிவு செய்யப்படுகிறது.
நோயறிதலுக்குப் பிறகு 10 ஆண்டுகள்
கீமோ சிகிச்சையால் கண்டிப்பாக பக்கவிளைவுகள் ஏற்படும், காரணம் பாதிக்கப்பட்ட செல்களுடன் ஆரோக்கியமான செல்களும் சேதமடைகிறது. இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 375,000 க்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய் விவகாரம்... முக்கிய அரச குடும்பத்து நிகழ்ச்சி ஒன்றை தவிர்க்கும் கேட் - வில்லியம் குடும்பம்
மட்டுமின்றி, 167,000 க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி மரணமடைகின்றனர். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் நோயறிதலுக்குப் பிறகு ஒரு 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக உயிர் வாழ்கின்றனர்.
வேல்ஸ் இளவரி கேட் மிடில்டன் தமக்கு எந்தவகையான புற்றுநோய் என்பதை குறிப்பிடாமல், தாம் கீமோ எடுத்துக்கொள்ள இருப்பதை குறிப்பிட்டுள்ளதால், அவர் கொஞ்சம் சிக்கலான நிலையில் இருப்பதாகவே மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சார்லஸ் மன்னர் தாம் கீமோ எடுத்துக்கொள்வதாக இதுவரை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |