இளவரசர்கள் வில்லியம் ஹரிக்கிடையே பிரிவை ஏற்படுத்திய கேட் குடும்பம்: வெளியாகியுள்ள புதிய தகவல்
இளவரசர் ஹரிக்கு திருமணமானபின்பு அவருக்கும் அவரது அண்ணனான இளவரசர் வில்லியமுக்குமிடையே பிரிவு ஏற்பட்டதாகத்தான் இதுவரை செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால், புதிய செய்தி ஒன்றைக் கூறியுள்ளார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
திருமணம் ஆனதும் மனைவி வீட்டுப்பக்கம் சாய்ந்த வில்லியம்
இளவரசர்கள் வில்லியம் ஹரிக்கிடையே உருவாகியுள்ள பிளவு இப்போது ஏற்பட்டது அல்ல, வில்லியமுக்கு திருமணமானதுமே பிரச்சினை உருவாகிவிட்டது என ராஜ குடும்ப முன்னாள் ஊழியர் ஒருவர் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப நிபுணரான Tina Brown என்பவர்.
ஒரு அக்கா இல்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. அந்த ஏக்கத்தைத் தீர்த்தவர் என் அண்ணி கேட்தான் என இளவரசர் ஹரி கூறியதுண்டு.
ஆனால், வில்லியமுக்கும் கேட்டுக்கும் திருமணம் ஆனதுமே வில்லியம் தன் மனைவி குடும்பம் பக்கம் சாய்ந்துவிட்டதாக தெரிவிக்கிறார் Tina Brown.
வில்லியம் முழுமையாக கேட் குடும்பத்தினர் பக்கம் சாய, ஹரி அப்போதே தனிமையாக உணரத் துவங்கிவிட்டதாகவும், குட்டி இளவரசி சார்லட் பிறந்தபிறகோ, வில்லியம் தன் திருமண வாழ்வு, புதிய குடும்பம் என மாறிவிட, சகோதரர்களுக்குள்ளான உறவில் அப்போதே மாற்றம் ஏற்படத்துவங்கிவிட்டது என்றும் கூறியுள்ளார் Tina Brown.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |