இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்த இளவரசி கேட்! டாங்கியில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரல்
ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு கேம்பிரிட்ஜ் இளவரசி கேட் மிடில்டன் டாங்கியில் அமர்ந்தபடி எடுத்துக்கொண்ட புதிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இன்று (ஜூலை 25) ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க்கும் வகையில், பயிற்சி தளத்தில் அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
40 வயதான கேட், ஆயுதப்படை தினத்தைக் குறிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் இதயப்பூர்வமான செய்தியை எழுதினார்.
கடந்த நவம்பரில் அபிங்டன் ஏர்ஃபீல்டில் உள்ள பிர்பிரைட் பயிற்சி அகாடமியில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களை அவர் சந்தித்த புகைப்படங்களை அதனுடன் பகிர்ந்துள்ளார்.
அவர் சில பயிற்சிப் பயிற்சிகளிலும் பங்கேற்றார் மற்றும் பிரித்தானிய இராணுவத்தில் அவர்களின் அனுபவங்களைப் பற்றி பணியாளர்களிடம் பேசி நேரத்தை செலவிட்டார்.
அவர் தனது பதிவில், “ஆயுதப்படை தினமான இன்று, வில்லியம் மற்றும் நானும், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும், கடலிலும், தரையிலும், ஆகாயத்திலும், நமது அனைத்து ஆயுதப்படைகளிலும் பணியாற்றிய துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் மரியாதை செலுத்த விரும்புகிறோம்..."
"எங்களை பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர், தியாகம் செய்த அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.