புற்றுநோய் சிகிச்சைக்குப்பின் கணவருடன் முதல் நிகழ்ச்சி: ராஜ குடும்ப மரபை மீறிய இளவரசி கேட்
புற்றுநோய் சிகிச்சைக்குப் பின், முதன்முறையாக தன் கணவரான இளவரசர் வில்லியமுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் இளவரசி கேட்.
அந்த நிகழ்ச்சியில் ராஜ குடும்ப மரபுகளை மீறி அவர் செய்த செயல் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
ராஜ குடும்ப மரபை மீறிய இளவரசி கேட் பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான கேட்டும், Southport என்னுமிடத்தில் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட மூன்று குழந்தைகளின் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
சுமார் ஒரு மணி நேரம் அந்தக் குடும்பங்களுடன் நேரம் செலவிட்ட வில்லியம் கேட் தம்பதியர், பின்னர் அந்த பயங்கர சம்பவத்தைத் தொடர்ந்து பரபரப்பாக அவசர உதவிகளை திறம்படச் செய்த மருத்துவ உதவிக்குழுவினர் முதலானவர்களை சந்தித்து உரையாடினார்கள்.
அப்போது அவசர உதவிக்குழுவினர் பலரை இளவரசி கட்டியணைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
ராஜ குடும்ப மரபின்படி ராஜ குடும்ப உறுப்பினர்களைத் தொட பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
என்றாலும், Southport சம்பவத்தால் அவசர உதவிக்குழுவினரின் உணர்ச்சிகள் பாதிக்கப்பட்டதை உணர்ந்துகொண்ட இளவரசி கேட், மரபுகளையும் மீறி அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.
வில்லியம் கேட் தம்பதியருக்கு மக்கள் மீது எவ்வளவு அக்கறை என்பதை அவர்களுடைய செயல் காட்டியதாக கூறி நெகிழ்கிறார்கள் அவசர உதவிக்குழுவினர்.