ஹலோ தாத்தா! மாமனாரை செல்லமாக அழைத்த இளவரசி கேட் மிடில்டன்- வைரலாகும் வீடியோ
இளவரசி கேட் மிடில்டன், தனது மாமனாரான சார்லஸை தாத்தா என அழைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரித்தானியாவில் நடைபெற்ற G7 மாநாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டு முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்ந்தனர்.
இதன் ஒரு பகுதியாக Eden Project வரவேற்பு நிகழ்ச்சியில் ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முதலில் ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி கமிலா நடந்து செல்ல, பின்னால் வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதியினர் சென்றனர்.
ராணி மற்றும் அவர்களது குடும்பத்தினரை பிரதமர் போரிஸ் ஜான்சன் வரவேற்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, சார்லஸ் பின்னால் திரும்பி பார்க்க, கேட் மிடில்டன் மிக செல்லமாக, ஹலோ தாத்தா, எப்படி இருக்கீங்க? என கேட்டுள்ளார்.
சார்லசுக்கு, தனது மகன்- மருமகள் மற்றும் பேரக் குழந்தைகள் மீது அதீத பாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.