கேட் மிடில்டனின் தொண்டு நிறுவன தலைவர் ஒரு கொலையாளி: அம்பலமான பகீர் பின்னணி
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் சிறார்களுக்கான தொண்டு நிறுவன தலைவர் ஒரு கொலையாளி என்பது தற்போது பின்னணியுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஐந்து முறை கத்தியால் தாக்கி கொலை
இளவரசி கேட் மிடில்டனின் சிறார்களுக்கான தொண்டு நிறுவன தலைவராக பால் கார்பெர்ரி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவரே ரயில் பயணத்தின் போது தந்தையாகப் போகும் நபர் ஒருவரை ஐந்து முறை கத்தியால் தாக்கி கொலைக்கு காரணமானார் எனவும் ஒருவரை காயப்படுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
@PA
ஆனால் இந்த விடயம் இளவரசர் வில்லியம் அல்லது அவரது காதல் மனைவி கேட் மிடில்டனுக்கோ தெரியாது என்றே கூறுகின்றனர். இருப்பினும் பால் கார்பெர்ரியின் சக ஊழியர்களுக்கு இவரது பின்னணி தெரியும் என்றே கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம், ஆண்டுக்கு 154,000 பவுண்டுகள் ஊதியத்திற்கு கேட் மிடில்டன் தலைமையிலான சிறார் தொண்டு நிறுவன தலைவராக பொறுப்பேற்றார். ஓராண்டுக்கு முன்னர், வில்லியம் மற்றும் கேட் தம்பதி ஒரு பாடசாலையில் வைத்து பால் கார்பெர்ரியை சந்திக்கும் போது, அவரது உண்மையான பின்னணி அறிந்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
தற்போது 60 வயதாகும் பால் கார்பெர்ரி தமது 16வது வயதில் கொலை வழக்கில் சிக்கினார். இருப்பினும், ஸ்கொட்லாந்தில் குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். தற்போது சிறார் தொண்டு நிறுவன தலைவராக, அதுவும் பிரித்தானிய இளவரசியின் தலைமையில் இயங்கும் தொண்டு நிறுவனத்திற்கு தலைவர் பொறுப்பு.
ஒவ்வொரு நாளும் தம்மை வருந்தச் செய்யும்
அந்த சம்பவம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் தம்மை வருந்தச் செய்யும் ஒன்று என குறிப்பிட்டுள்ள பால் கார்பெர்ரி, தம்மால் ஒரு குடும்பம் அவர்களின் பிரியமான ஒருவரை இழந்துள்ளது என்றார்.
1979ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்காக லண்டனுக்கு ஸ்காட்லாந்து கால்பந்து ரசிகர்களை ஏற்றிச் சென்ற ரயிலில் ஜான் முர்ரே (21) என்பவரை கார்பெர்ரி கத்தியால் குத்தினார்.
@PA
நீதிமன்ற தரவுகளில், சம்பவத்தின் போது கார்பெர்ரி மது போதையில் இருந்துள்ளார் எனவும், இவர் சார்ந்த குழுவினர் பெண் பயணி ஒருவரை துஸ்பிரயோகம் செய்தது எனவும், இதன் காரணமாக மோதல் வெடித்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கத்தியுடன் துரத்திய கார்பெர்ரி, தூக்கத்தில் இருந்த ஒருவரை தாக்கியதுடன், தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்ட ஜான் முர்ரே என்பவரை கொடூரமாக தாக்கி கொலையும் செய்ததாக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து கார்பெர்ரி கைது செய்யப்பட, குற்றவாளி என நிரூபணமான நிலையில், தலையில் பட்ட காயத்தால் தமக்கு என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை என சாதித்துள்ளார்.
மேலும், பிரித்தானிய சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவிக்காத குற்றவாளி என்ற சலுகையும் ஸ்கொட்லாந்து நாட்டவரான கார்பெர்ரி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.