இனவெறுப்பு சர்ச்சையில் சிக்கிய இளவரசி கேட்டும் மன்னர் சார்லசும்: ஒருவருக்கு கடுமையான பாதிப்பு என்கிறார்கள் விமர்சகர்கள்
பிரித்தானிய மன்னர் சார்லசும், இளவரசி கேட்டும் இனவெறுப்பு தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், மன்னரைவிட, இளவரசி கேட்டுக்குத்தான் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள், ராஜ குடும்ப விமர்சகர்கள்.
ராஜ குடும்பத்தில் இனவெறுப்பாளர்கள்
பிரித்தானிய இளவரசரான ஹரியின் மனைவி மேகன் ஒரு கலப்பினப் பெண். அதாவது, அதாவது அவரது தாய் கருப்பினத்தவர், தந்தை வெள்ளையினத்தனர்.
ஆகவே, மேகன் கருவுற்றபோது, அவரது குழந்தை என்ன நிறத்திலிருக்கும் என ராஜ குடும்பத்தில் பேச்சு அடிபட்டுள்ளது.
Image: PA
ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியபின், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்கள். அப்போது, தன் மகனுடையை நிறம் குறித்து ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியதாக கூறியிருந்தார் மேகன்.
பிரித்தானியாவில் உருவாகியுள்ள சர்ச்சை
இந்நிலையில், இளவரசர் ஹரியின் மகனுடைய தோலின் நிறம் குறித்து விமர்சித்ததாக எழுத்தாளர் ஓமிட் தனது புத்தகத்தில் இரண்டு பேருடைய பெயர்களை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்று, மன்னர் சார்லஸ், இரண்டு, வருங்கால மன்னரான இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட்.
மன்னரும், இளவரசி கேட்டும் இனரீதியாக விமர்சித்ததாக வெளியான தகவலால் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
இளவரசி கேட்டுக்குத்தான் கடுமையான பாதிப்பு
இந்நிலையில், மன்னர் மற்றும் இளவரசி கேட் சர்ச்சையில் சிக்கினாலும், மன்னரைவிட, இளவரசி கேட்டுக்குத்தான் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள், ராஜ குடும்ப விமர்சகர்கள்.
வரலாற்றாளரும், ராஜ குடும்ப நிபுணருமான Dr Tessa Dunlop, சர்ச்சையில் மன்னரும் கேட்டும் சிக்கினாலும், ஒரு பெண் என்பதால் இளவரசி கேட்டுக்குதான் அதிக பாதிப்பு என்கிறார்.
சார்லசைப் பொருத்தவரை, 75 வயதாகும் அவரை ஒரு தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதால், மக்கள் அவரை எளிதாக மன்னித்துவிடுவார்கள். ஆனால், கேட்டால் வயதுக்குப் பின்னால் ஒளிய முடியாது. ஆகவே, அவரது பெயர் சர்ச்சையில் சிக்கிய விடயம் கொடுமையானது. ஆக, ஏற்கனவே மேகன் பெயர் சேதமாகிவிட்டது, இப்போது கேட் பெயரும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், சமூகம் பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறது. குறிப்பாக, இளவரசிகள் என்பவர்கள் மென்மையானவர்கள் என்ற கோணத்தில் மக்கள் பார்ப்பதால், தோலின் நிறம் குறித்து உருவாகியுள்ள இந்த சர்ச்சை கேட்டின் புகழையும் பாதிக்கும் என்கிறார் Dr Tessa Dunlop.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |