மேகன் மெர்க்கலை தனியாக சந்திக்கும் கேட் மிடில்டன்: அவரின் திட்டம் இதுதான்
ஹரி உடனான திருமணத்திற்கு முன்னர், கேட் மிடில்டன் தம்மை அழவைத்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
கேட் மிடில்டன் தம்மிடம் மன்னிப்பு கோரியதாகவும், பூக்கள் அனுப்பி, சிறு குறிப்பும் அளித்ததாக மேகன்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமது கணவருடன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், அவர் மேகன் மெர்க்கலை சந்திப்பார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இருவருக்கும் இடையேயான பிரிவை முடிவுக்கு கொண்டுவரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இளவரசர் ஹரி- மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறிய பின்னர், ஊடக பிரபலம் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
@rex
இதில், ஹரி உடனான திருமணத்திற்கு முன்னர், கேட் மிடில்டன் தம்மை அழவைத்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார் மேகன். திருமணம் நடக்கவிருக்கும் அந்த வாரத்தில் இறுக்கமான மனநிலையை உணர்ந்ததாகவே மேகன் மெர்க்கல் அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அதன் பின்னர், கேட் மிடில்டன் தம்மிடம் மன்னிப்பு கோரியதாகவும், பூக்கள் அனுப்பி, சிறு குறிப்பும் அளித்ததாக மேகன் குறிப்பிட்டிருந்தார். 2020ல் ஹரி- மேகன் தம்பதி அரண்மனை பொறுப்புகளில் இருந்து விலகி, அமெரிக்காவில் குடியேற முடிவு செய்த பின்னர் தான் இவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
@getty
ஆனால், தற்போது கேட் மிடில்டனே முன்வந்து, உறவை புதுப்பிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா பயணத்தில் மேகன் மெர்க்கல் மற்றும் குடும்பத்தை சந்திக்க கேட் மிடில்டன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் வில்லியம்- கேட் தம்பதியின் பாஸ்டன் பயணம் முடிவானதும் மேகன் மெர்க்கலை தொடர்பு கொண்டு சந்திப்புக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்றே கூறப்படுகிறது.
@getty
தற்போது ஹரி- மேகன் தம்பதியும் அடுக்கடுக்கான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இருப்பினும், கேட் மிடில்டன் அமெரிக்காவில் தங்கியிருக்கும் நாட்களில் மேகன் மெர்க்கலும் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிரது.
இளவரசர் வில்லியம்- கேட் தம்பதி கடந்த 8 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்கா செல்ல உள்ளனர்.
டிசம்பர் மாதம் முன்னெடுக்கப்படும் இந்த பயணத்தில், பாஸ்டன் நகரில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.