இளவரசி கேட் மிடில்டனின் உடல்நிலை... தாய்மாமன் பகிர்ந்த அந்த விடயம்
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் தொடர்பாக அவரது தாய் மாமன் Gary Goldsmith பகிர்ந்துகொண்ட சில மறைமுக தகவல்கள், பிரித்தானிய அரச குடும்பத்து ஆதரவாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கென்சிங்டன் அரண்மனை
கடந்த சில வாரங்களாக வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் பொது நிகழ்ச்சிகளில் எதுவும் தலைகாட்டாமல் இருப்பதை அடுத்து, சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் உலாவரத் தொடங்கியுள்ளது.
பிரித்தானியாவின் எதிர்கால ராணியாரான கேட் மிடில்டன் இந்த ஆண்டு தொடக்கத்தில் அடிவயிறு தொடர்பான அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை தேறி வருவதாக அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது.
மெரிலேபோனில் உள்ள லண்டன் கிளினிக்கில் நடந்த அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக கென்சிங்டன் அரண்மனை ஜனவரி மாதம் அறிவித்தது.
ஆனால் அந்த அறுவை சிகிச்சையின் காரணம் அல்லது பின்னனி தொடர்பில் எந்த விரிவான தகவலையும் அரண்மனை வட்டாரத்தில் இருந்து வெளியிடப்படவில்லை.
மட்டுமின்றி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் இளவரசி கேட் மிடில்டன் கலந்து கொள்ளவும் இல்லை. ஆனால் மார்ச் 4ம் திகதி விண்ட்சர் அரண்மனைக்கு அருகில் ஒரு காரில் தாயாருடன் அவர் காணப்பட்டதாக புகைப்படங்கள் வெளியாகின.
உயர்தர சிகிச்சை
இந்த நிலையிலேயே தொலைக்காட்சி பிரபலமும், தொழிலதிபரும், இளவரசி கேட் மிடில்டனின் தாய் மாமனுமான Gary Goldsmith என்பவரிடம் இந்த விவகாரம் தொடர்பில் வினவியுள்ளனர்.
அப்போது அவர், இந்த உலகில் கிடைக்கும் உயர்தர சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். கேட் மிடில்டன் தற்போது எங்கே உள்ளார் என்ற கேள்விக்கு கொஞ்சம் தடுமாறிய Gary Goldsmith, தமது மருமகள் எங்கே இருக்கிறார் என்பது குறித்து விவாதிப்பதை விரும்பமாட்டார் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், தமது சகோதரி கரோல் மிடில்டனிடன் இது தொடர்பில் விவாதித்ததாகவும், உலகின் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மொத்த குடும்பமும் கேட் மிடில்டனுடன் இருப்பதாகவும் Gary Goldsmith குறிப்பிட்டுள்ளார்.
கேட் மிடில்டன் அருமையான நபர், அவர் கண்டிப்பாக மீண்டு வருவார், அதற்கான துணிச்சல் அவருக்கு உண்டு என்றும் Gary Goldsmith குறிப்பிட்டுள்ளார். ஆனால் Gary Goldsmith அளித்த விளக்கம், உணர்ச்சிவசப்பட்ட பதில் என அனைத்தும் அரச குடும்பத்து ஆதரவாளர்களை தற்போது கவலைகொள்ள வைத்துள்ளது.
கேட் மிடில்டனின் நிலை அரண்மனை இதுவரை வெளியிட்டுள்ள தகவலைவிட மிக மோசமாக உள்ளது என நம்புவதாகவே பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |