கணவர் கண்முன்னே மற்றொரு ஆண் கன்னத்தில் முத்தமிட்ட இளவரசி கேட்
இளவரசர் வில்லியம் கண் முன்னே, விளையாட்டு வீரர் ஒருவர் கன்னத்தில் மூன்று முறை முத்தமிட்டார் இளவரசி கேட்.
டென்னிஸ் ரசிகையான இளவரசி கேட்
இளவரசர் வில்லியமுடைய மனைவியான இளவரசி கேட், தீவிர டென்னிஸ் ரசிகை. இளவரசர் ஜார்ஜை வயிற்றில் சுமக்கும்போது, அதுவும் பிரசவம் நெருங்கிவந்ததால் மட்டும், ஒரே ஒரு முறை அவர் விம்பிள்டன் போட்டியை தவறவிட்டிருக்கிறார். மற்றபடி ஒரு விளையாட்டைக் கூட தவறவிடமாட்டார் கேட். அந்த அளவுக்கு அவருக்கு டென்னிஸ் பிடிக்கும்.
விளையாட்டு வீரர் கன்னத்தில் முத்தமிட்ட இளவரசி கேட்
ஒருமுறை, தனக்குப் பிடித்த விளையாட்டு வீரர் ஒருவர், 6-3, 6-1, 6-4 என்ற தொகுப்புக் கணக்கில் எதிரணி வீரரை வெல்ல, மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற கேட், மக்கள், ராஜ குடும்பத்தினர் முன்னிலையில், தன் கணவர் இளவரசர் வில்லியம் கண் முன்னே அந்த விளையாட்டு வீரரை மூன்று முறை கன்னத்தில் முத்தமிட்டார்.
இளவரசர் வில்லியம் ரியாக்ஷன்
ஆனால், அதைக் குறித்து எந்த கவலையும் படவில்லை இளவரசர் வில்லியம். சொல்லப்போனால் பரிசு பெற்ற அந்த வீரருடன் கை குலுக்கி அவரை வாழ்த்தினார் வில்லியம்.
யார் அந்த வீரர்?
அப்படி இளவரசி கேட்டின் அன்பைப் பெற்ற அந்த வீரர், சுவிஸ் டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர். கேட் அவருக்கு ரசிகை மட்டுமல்ல, அவரது சகோதரி பிப்பா மிடில்டனுடைய திருமணத்திலும் கலந்துகொள்ளும் அளவுக்கு கேட்டும் பெடரரும் நண்பர்கள்.
பல்வேறு தருணங்களில் கேட்டும் பெடரரும் உரையாடிக்கொள்ளும் ஏராளமான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |