அம்மாவை போன்றே மனைவியும்: இளவரசர் வில்லியமுக்கு ஒரே ஒரு வருத்தம்
சார்லசுக்கும் டயானாவுக்கும் இடையிலான 15 வருட திருமண வாழ்க்கையின்போது, சார்லசைவிட அதிக கவனம் ஈர்த்தவர் டயானா. தற்போது, அதேபோல இப்போது இளவரசி கேட் மக்கள் கவனத்தை ஈர்த்துவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சார்லஸ் கோபப்பட்டதாக காட்டிய தொலைக்காட்சித் தொடர்
பிரித்தானிய மன்னரின் குடும்பக் கதைகளை மையமாகக்கொண்டு வெளியாகிவரும் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில், அவுஸ்திரேலியாவுக்கு சார்லசும் டயானாவும் அரசு முறைப்பயணமாக சென்றிருந்தபோது, மக்கள் கூட்டம் டயானாவைக் காண முந்தியடிக்க, இது என்னுடைய அரசு முறைப்பயணம், ஆனால், மக்கள் கவனமெல்லாம் டயானா மீதுதான் இருக்கிறது என சார்லஸ் கோபத்துடன் கூறுவதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
Tim Graham Photo Library via Getty Images
அது சற்றே பெரிதுபடுத்தப்பட்டக் காட்சி என்றாலும், உண்மையிலேயே எங்கு சென்றாலும் சார்லசைவிட டயானா அதிக கவனம் ஈர்த்தார்.
இந்த விடயம், சார்லசும் டயானாவும் பிரிந்த பிறகும் தொடர்ந்தது. டயானாவின் அழகு மட்டுமல்ல, அவரது கருணையும், அத்துடன் தொண்டு நிறுவனங்களில் அவர் சேவை செய்த விதமும்கூட மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
கவனம் ஈர்க்கும் கேட்
எப்படி டயானா மக்களின் கவனத்தை ஈர்த்தாரோ, அதேபோல, தற்போது இளவரசி கேட் மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.
இருவருக்கும் வித்தியாசம் என்னவென்றால், டயானா பிரபலமானது சார்லசுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இளவரசர் வில்லியமோ, தன் மனைவி மக்களால் விரும்பப்படுவதை ரசிக்கிறார்.
PA
ஒரே ஒரு வருத்தம்
ஆனாலும், இளவரசர் வில்லியமுக்கு ஒரே ஒரு வருத்தம் உள்ளது. அது என்னவென்றால், அவரை புகைப்படங்களிலிருந்து வெட்டிவிடுகிறார்களாம் ஊடகவியலாளர்கள்.
அதாவது, இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான இளவரசி கேட்டும் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், மறுநாள் அது தொடர்பாக வெளியாகும் புகைப்படங்களில், இளவரசர் வில்லியமை வெட்டி விடுகிறார்களாம் ஊடகவியலாளர்கள்.
அந்த நிகழ்ச்சியில் வில்லியம் கலந்துகொள்ளவேயில்லை என எண்ணும் அளவுக்கு இளவரசி கேட்டுடைய படங்கள் மட்டுமே ஊடகங்களில் வெளியாகின்றனவாம்.
POOL/AFP via Getty Images