அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் முந்தி வியக்க வைத்த கேட் மிடில்டன்! அருகில் கூட வராத மேகன்
அமெரிக்காவில் மேகன் மெர்க்கல், கேட் மிடில்டன் மற்றும் வில்லியம் அளவுக்கு பிரபலமானவர் இல்லை கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
கருத்து கணிப்பு
Newsweek நடத்திய கருத்து கணிப்பில் தான் இந்த விடயம் தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி அமெரிக்காவில் மேகனின் அங்கீகார மதிப்பீடு தற்போது -13 ஆக உள்ளது, அதே சமயம் அவரது மாமியார் கமிலா -8 இல் உள்ளார்.
இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பான ஸ்பேர் வெளியான பிறகே இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. கேட் மிடில்டன் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான அரச குடும்ப நபராக உருவெடுத்துள்ளார்.
glamourmagazine/Misan Harriman
மிக பிரபலமாக இருக்கும் கேட்
கேட்டின் நிகர அங்கீகாரம் +26 மற்றும் அவரது கணவர் இளவரசர் வில்லியமின் புகழ் +21 ஆக உள்ளது. இளவரசர் ஹரிக்கான அங்கீகாரம் -7 என்ற அளவில் உள்ளது.
கடந்த மாதம், 2022 டிசம்பரில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், இளவரசர் ஹாரியின் புகழ் +38 ஆகவும், மேகனின் +23 ஆகவும் பதிவுசெய்யப்பட்டது, அதே நேரத்தில் ராணி கமிலா, -2 என்ற நிகர அங்கீகார மதிப்பீட்டில் பிரபலத்தில் மிகவும் பின்தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.