இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பமாக இருப்பதாக தகவல்., மறைந்த ராணி எலிசபெத்திற்கும் இது தெரியுமா!
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி, இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பமாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
கேட் மற்றும் வில்லியமுக்கு ஏற்கனவே ஜார்ஜ், சார்லோட் மற்றும் லூயிஸ் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது நான்காம் குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கேட் மிடில்டன் தனது நான்காவது குழந்தையை எதிர்பார்க்கிறார் என்றும், அவரும் இளவரசர் வில்லியமும் செப்டம்பர் 8-ஆம் திகதி இறப்பதற்கு முன்பு எலிசபெத் மகாராணியிடம் கர்ப்பம் பற்றி கூறியதாக அரச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் கூறியதாக இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ்-ல் வெளியானது.
PA Wire
தகவல்களின்படி, ராணி இறப்பதற்கு சற்று முன்பு வில்லியம் அவரிடம் கூறியதாக கிசுகிசுக்கள் உள்ளன, அவரிடம் சொன்னதே பாரிய ஆசீர்வாதமாக இருக்கும் என அவர்கள் நம்பினர். சொன்னதும் ராணி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் என்று அவர்கள் தெரிந்துகொண்டதாக கூறப்படுகிறது
ராணி தனது பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரக்குழந்தைகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர் அவர்கள் மீது, குறிப்பாக சிறு குழந்தைகளை விரும்பினார்.
AP
இதனிடையே, கேட் மிடில்டன் ஒளிருவதாகவும், இளவரசி கடந்த இரண்டு ஆண்டுகளாக மற்றொரு குழந்தையை பெற விரும்புவதாகவும், ஸ்டார் பத்திரிக்கையில் பெயர் குறிப்பிடப்படாத நபர் கூறியதாக வெளியானது.
கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியமுக்கு ஏற்கனவே இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
AP