வாழ்த்தியவர்களுக்கு நன்றி! இளவரசி கேட் மிடில்டன், வில்லியம் தம்பதி புதிய அறிக்கை
கேட் மிடில்டனின் புற்றுநோய் தொடர்பான செய்தி வெளியானதை தொடர்ந்து, கேம்ப்ரிட்ஜ் டியூக் மற்றும் டச்சஸ் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கேட் மிடில்டனுக்கு புற்றுநோய்
பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசியான கேட் மிடில்டன்(kate-middleton, 42) சமீபத்தில் வெளியிட்ட வீடியோ அறிக்கை ஒன்றில், புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தை பற்றி திறந்த மனதுடன் பேசினார்.
அதில், கடந்த ஜனவரியில் வயிற்றுப் பகுதியில்(Major Abdominal) அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது புற்றுநோய் பாதிப்பு இல்லை என்றும், ஆனால், பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இது தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்ததாகவும், . தங்களது குடும்பத்தினரைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் சமாளித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
மேலும் தான் விரைவில் குணமடைவேன் என்றும் அதில் உறுதி தெரிவித்து இருந்தார். இந்த சக்தி வாய்ந்த செய்தி உலகமெங்கும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புதிய அறிக்கை
இந்நிலையில் கேம்ப்ரிட்ஜ் டியூக் மற்றும் டச்சஸ் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவுக்கு நன்றியை தெரிவிக்கும் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கென்சிங்டன் அரண்மனையால் வெளியிடப்பட்ட இந்த புதிய அறிக்கையில், பொதுமக்கள் தெரிவித்த வாழ்த்துக்களுக்கு தம்பதியர் நன்றியை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் "பரிபூரணமான ஆதரவு மற்றும் அன்பு" "தனிமை தேவைப்படுவது குறித்த அவர்களின் கோரிக்கையை புரிந்து கொண்டதற்காக நன்றி" என்று தெரிவித்துள்ளனர்.
இளவரசர் வில்லியமும், இளவரசி கேட் மிடில்டனும் இந்த சவாலான சூழ்நிலையில் தங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிடுவதில் கவனம் செலுத்துகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Prince William, Kate Middleton, Kate's Cancer Diagnosis, Duke and Duchess of Cambridge,