வில்லியம் கேட் கல்லூரியில் படிக்கும்போது துணைவேந்தர் சொன்ன தீர்க்கதரிசன வார்த்தை
பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான கேட்டும் ஒரே பல்கலையில் படித்தவர்கள் என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.
அவர்கள் படிக்கும்போது அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சொன்ன ஒரு விடயத்தை பின்னாட்களில் நினைவுகூர்ந்துள்ளார் ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர்.
துணைவேந்தர் சொன்ன தீர்க்கதரிசன வார்த்தை
இளவரசர் வில்லியமும் கேட்டும் செயிண்ட் ஆண்ட்ரூ பல்கலையில் பட்டப்படிப்பை முடித்தார்கள்.
அவர்களுடைய பட்டமளிப்பு விழாவின்போது, அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பிரையன் லேங் (Brian Lang) உரையாற்றியுள்ளார்.
தனது உரையில் அவர், இந்த பல்கலையில் பயின்ற உங்களில் பலர் வாழ்நாள் நண்பர்களாகியிருக்கலாம், சிலர் உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ இங்கு சந்தித்திருக்கலாம்.
நம் பல்கலை அந்த விடயத்தில் பிரித்தானியாவிலேயே முதலிடம் வகிக்கிறது.
ஆக, முன்னேறிச் செல்லுங்கள், திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றெடுங்கள், உங்கள் குடும்பங்கள் பெருகட்டும் என்று கூறியுள்ளார் பிரையன்.
பிரையன் சொன்ன விடயம் அப்படியே வில்லியம் கேட் வாழ்க்கையில் பலிக்கும் என்று எத்தனை பேர் நினைத்திருப்பார்கள் என்று கேட்கும் ராஜ குடும்ப எழுத்தாளரான கேட்டி நிக்கோல் (Katie Nicholl), அவர் சொன்னவை தீர்க்கதரிசன வார்த்தைகள் என்கிறார்.
பிரையன் அன்று சொன்னதுபோலவே, அந்தப் பல்கலையில் பயின்ற வில்லியமும் கேட்டும் தம்பதியராகி, இன்று மூன்று பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள்.
இளவரசி கேட்டின் வாழ்க்கை வரலாற்றை Kate: The Future Queen என்னும் புத்தகமாக எழுதிய கேட்டி, இந்த விடயத்தை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |