வில்லியம் கேட் புகழ் மீது ஹரியின் புத்தகம் ஏற்படுத்திய தாக்கம்: ஒற்றை புகைப்படம் கூறும் உண்மைகள்
இளவரசர் ஹரி வெளியிட்டுள்ள புத்தகம் ராஜ குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து இதுவரை மன்னர் சார்லசோ, அல்லது இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரோ எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.
ஹரியின் புத்தகம் குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள்
மன்னர் சார்லசிடமும், இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரிடமும் ஹரியின் புத்தகம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை.
ஆகவே, அவர்கள் ஹரியின் புத்தகத்தை அலட்சியப்படுத்தி தங்கள் கடமைகளில் கவனம் செலுத்தப்போய்விட்டதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
Image: Getty Images
உண்மை நிலையை உணர்த்தும் ஒற்றைப் புகைப்படம்
ஆனால், இந்த வாரம் இளவரசி கேட் தனது காரில் பயணிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளைக் காட்டும் அந்த புகைப்படம் அவரது உண்மையான மன நிலையைக் காட்டுவதாகக் கூறுகிறார் Daniela Elser என்னும் ராஜ குடும்ப விமர்சகர்.
இளவசர் வில்லியமும் கேட்டும் தாங்கள் நார்மலாக இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த புகைப்படத்தைப் பார்த்தாலே கேட்டின் மன நிலையைப் புரிந்துகொள்ளலாம் என்கிறார்.
NEW: HRH The Princess of Wales seen today ??
— Countess Commonwealth (@CountessCommon1) January 11, 2023
? Jim Bennett pic.twitter.com/B7L2FVZcSc
அத்துடன், ஹரியின் புத்தகம் வெளியானதத் தொடர்ந்து, இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்டின் புகழ் குறையத் துவங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள Daniela, வில்லியமுக்கு மக்களின் நிகர ஆதரவு 49 சதவிகிதமாகவும், கேட்டுக்கு 50 சதவிகிதமாகவும் உள்ளதாகவும், 2011இல் இந்த கருத்துக்கணிப்பு துவங்கப்பட்ட நிலையில், இதுதான் அவர்கள் இருவருக்கும் கிடைத்துள்ள குறைவான புள்ளிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
Image: Pacific Press/LightRocket via Getty Images