முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டார் கேட் மிடில்டன்: வெளியான புகைப்படம்
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் காதல் மனைவி கேட் மிடில்டன் தமது முதல் டோஸ் தடுபூசியை நேற்று பெற்றுக் கொண்டுள்ளார்.
இளவரசர் வில்லியம் தமது முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக் கொண்ட 9 நாட்களுக்கு பின்னர் 39 வயதான கேட் மிடில்டன் தமது முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்.
லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் கேட் மிடில்டன் தமது முதல் டோஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை புகைப்படங்களுடன் தற்போது அவரே வெளியிட்டுள்ளார். மேலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கேட் மிடில்டன் நன்றி கூறியுள்ளதுடன், பணி சிறக்க வாழ்த்துகள் எனவும் தமது குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கேட் மிடில்டன் எந்த நிறுவனத்தின் தடுப்பூசி பெற்றுக்கொண்டார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தற்போது பைசர் அல்லது மாடர்னா நிறுவன தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் இந்த நிறுவனத்தில் ஏதேனும் ஒரு தடுப்பூசி டோஸ் கேட் மிடில்டன் பெற்றிருப்பார் என்றே கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் இளவரசர் வில்லியம் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி, மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், இளவரசர் வில்லியம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பின்னரே, இந்த தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.