ஹரி- மேகன் தொடர்பாக கேட் மிடில்டன் நண்பர்களிடம் கூறிய அந்த விடயம்
ஹரி- மேகன் மெர்க்கல் தொடர்பான விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தாம் கருதவில்லை என கேட் மிடில்டன் தமது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகி, அமெரிக்காவில் குடியேறிய பின்னர் ஹரி தொடர்ந்து தமது அரச குடும்பம் தொடர்பில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
வெள்ளையரல்லாத ஒருவருடன் நெருக்கமாக பழகியதாலையே தமது தாயார் டயானா இறக்க நேரிட்டது என தாம் நம்புவதாக ஹரி தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி அதே நிலை தமக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என அஞ்சுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுவாக பிரித்தானிய மக்களால் அதிகம் விரும்பப்படாத, எதிர்காலத்தில் அரியணைக்கு சொந்தக்காரருமான சார்லஸ் தொடர்பிலும் ஹரி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
தமது தந்தையான சார்லஸ், தாயார் டயானாவின் மரணத்திற்கு பின்னர் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவில்லை எனவும், மொத்த வலியையும் அவர் பிள்ளைகள் தங்கள் தோளில் சுமத்தியதாகவும் ஹரி குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதனாலையே, மதுவுக்கும் போதை மருந்துக்கும் அடிமையாகும் சூழல் ஏற்பட்டதாகவும் ஹரி உடைத்து பேசியிருந்தார். இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டயானாவின் உருவச்சிலை திறக்கும் விழாவில் ஹரி கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகும் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, ஹரி- மேகன் தொடர்பிலான அனைத்து விவகாரத்தையும் தம்மால் எளிதில் முடித்துவைக்க முடியும் எனவும், அதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தாம் கருதவில்லை எனவும் கேட் மிடில்டன் தமது நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இளவரசர் பிலிப் காலமான நிலையில், இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ள வந்த ஹரி, தமது தந்தை சார்லஸ் மற்றும் சகோதரர் வில்லியம், ராணியார் ஆகியோருடன் தனித்தனியாக பேசிவிட்டு சென்றுள்ளார்.
இதன் பின்னணியிலேயே கேட் மிடில்டன் ஹரி தொடர்பில் தமது நம்பிக்கையை தனது நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.