சிகிச்சைக்குப் பிறகு இளவரசி கேட் முழுவீச்சில் பணிக்குத் திரும்புவாரா? சமீபத்திய தகவல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய இளவரசி கேட்டுக்கு கீமோதெரபி சிகிச்சை முடிந்தபிறகும், அவர் முழுமையாக பணிக்குத் திரும்பவில்லை.
இந்நிலையில், அவர் முழுமையாக பணிக்குத் திரும்புவாரா இல்லையா என்பது குறித்து அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
இளவரசி கேட் முழுவீச்சில் பணிக்குத் திரும்புவாரா?
இளவரசி கேட்டுக்கு கீமோதெரபி சிகிச்சை முடிந்தாலும், அவர் முழுவீச்சில் பணிக்குத் திரும்பமாட்டார் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் ஒருவரது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
இளவரசி கேட் பணி செய்வதற்கான அர்ப்பணிப்பு கொண்டவர் என்பது உண்மை. அதே நேரத்தில், இளவரசி கேட்டும் இளவரசர் வில்லியமும் தங்கள் பிள்ளைகள் மீதும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.
ஆக, தங்கள் ஒரு இளவரசர் இளவரசியாக பணியாற்றிக்கொண்டே, தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோராகவும் கடமையாற்றுவதை நடைமுறையில் செயலாற்ற அவர்கள் முயன்று வருகிறார்கள் என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த அந்த நபர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |