பிரித்தானிய இளவரசி கேட்டின் பளபளப்பான சருமத்துக்குக் காரணம் இந்த இரண்டு காய்கறிகள்தானாம்...
பொதுவாகவே ராஜகுடும்பத்தினர் தங்கள் உடல் நலத்தின்மீது அதிக அக்கறை காட்டுவார்கள்.
பிரித்தானிய மகாராணியாருக்கு அடுத்து அவரைப் போலவே உடல் நலத்தில் அக்கறை காட்டும் மற்றொரு ராஜகுடும்ப உறுப்பினர் இளவரசி கேட்.
தங்கள் உடல் நலத்தின்மீது அதிக அக்கறை காட்டும் ராஜகுடும்பத்தினர், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, தங்கள் உடல் நலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, கடல் உணவுகள் சிலவற்றைத் தவிர்ப்பது கூட உண்டு.
மகாராணியார் தன் உடல் நலம் மீதான அக்கறையால், தான் உண்ணும் உணவுப்பொருட்கள் மீது அதிக கவனம் செலுத்துவாராம்.
Image: Max Mumby/Indigo/Getty Images
அவரைப் போலவே உடல் நலத்தில் அக்கறை காட்டும் மற்றொரு ராஜகுடும்ப உறுப்பினர் இளவரசி கேட்.
ஆம், தனது உணவில் எப்படியும் இரண்டு புரோட்டீன் வகை உணவுகளை தவறாமல் சேர்த்துக்கொள்வாராம் கேட். அத்துடன், பசலைக்கீரை மற்றும் முட்டைக்கோசு போன்ற ஒருவகை காய்கறி ஒன்றின் இலை (Kale ) ஒன்று ஆகிய இரண்டும் கட்டாயம் இளவரசியின் உணவில் தினமும் இருக்குமாம்.
அவை போக, ஓட்ஸ், அவக்கேடோ மற்றும் ஸ்பைருலினா என்னும் நீலப்பச்சைப் பாசி வகை உணவுகளையும் தன் உணவில் சேர்த்துக்கொள்வாராம் கேட்.
இந்த பசலைக்கீரை, பல பயன்களை தரக்கூடியதாம். அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்துவதுடன், அதில் இரும்புச் சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளனவாம். அதேபோல இந்த Kale என்னும் காய்கறியிலும் வைட்டமின் A மற்றும் C ஆகிய சத்துக்களும் உள்ளதுடன், இந்த இரண்டும் தோலை பளபளப்பாகவும், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் அற்றதாகவும் பாதுகாக்குமாம்.
இளவரசி கேட்டின் தோல் பளபளப்பாக இருப்பதன் இரகசியம் இதுதான்.
Image: Getty Images