தனியாகச் சென்ற இளவரசி கேட்டிடம் பல்லைக் காட்டிய நபர்கள்: இளவரசியின் ரெஸ்பான்ஸ்
முதன்முறையாக பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் தனித்தனியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள்.
வில்லியம் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்காக அமெரிக்கா முதலான சில நாடுகளுக்கு பயணிக்கும் நிலையில், கேட், தனக்கு புதிதாக வழங்கப்பட்ட ராணுவ பொறுப்பின் நிமித்தம் ராணுவ வீரர்களை சந்தித்துவருகிறார்.
இளவரசி கேட்டிடம் பல்லைக் காட்டிய நபர்கள்
இந்நிலையில், தனியாகச் சென்ற இளவரசி கேட்டிடம், சிலர் அசடு வழிவதும், பல்லைக் காட்டுவதுமாக இருந்துள்ளார்கள். ஆனால், கேட் அப்படிப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிட்டாராம்.
Image: Tim Rooke/REX/Shutterstock
சில நேரங்களில் சிரிப்பூட்டும் செயல்கள் நடந்தாலும், மரியாதையாகவும் நட்புடனும் நடந்துகொண்டாரேயொழிய, தன் கணவருடைய மரியாதையை அவர் காத்துக்கொண்டார் என்கிறார்கள் உடல் மொழி வல்லுநர்கள்.
Image: REX/Shutterstock
இளவரசி தங்களிடம் ப்ரீயாக பழகுவதாக எண்ணி, இங்கும் அங்குமாக சிலர் கேட்டிடம் அசடு வழிய முயன்ற நிலையில், அவர்களைத் தவிர்த்து, அவர்களுக்கு ரெஸ்பான்ஸ் செய்யாமலே இருந்துவிட்டார் கேட். என் கணவர் என்னுடன் இல்லாவிட்டாலும், நான் அவருக்கு எப்போதும் உண்மையுள்ளவளாகவே இருப்பேன் என்பது போல் இருந்தது அவர் நடந்துகொண்ட விதம் என்கிறார்கள் அவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |