அன்னையர் தினத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துகொண்டு உறுதி செய்த கேட் மிடில்டன்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது அடி வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் முறையாக மெளனம் கலைந்துள்ளார்.
இதுவரை பகிர்ந்திராத புகைப்படம்
இளவரசி கேட் மிடில்டன் தனது பிள்ளைகளுடனான இதுவரை பகிர்ந்திராத புகைப்படம் ஒன்றை அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளதுடன், இதுவரையான பொதுமக்களின் ஆதரவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் இளவரசி கேட் மிடில்டன் பகிரும் முதல் புகைப்படம் இது. இந்த வார தொடக்கத்தில், வேல்ஸ் இளவரசரால் விண்ட்சரில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றே கூறப்படுகிறது.
அதில், உங்கள் கனிவான வாழ்த்துகளுக்கும் கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் மகிழ்வான அன்னையர் தின வாழ்த்துகள் என்றும் அதில் அவர் பதிவு செய்துள்ளார்.
சிகிச்சை அளிக்கப்படுவதாக
கடந்த இரு மாதங்களாக கேட் மிடில்டன் தொடர்பில் பல்வேறு வதந்திகள் பூதாகரமாக பரவி வந்தது. அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வந்தது.
அத்துடன் இளவரசி கேட் மிக ஆபத்தான நிலையில் இருக்கிறார், அதனாலையே இளவரசர் வில்லியம் அஞ்சலி கூட்டம் ஒன்றில் இருந்து பாதியில் வெளியேறினார் என்றும் கூறப்பட்டது.
மேலும், கேட் மிடில்டனின் தாய்மாமா பகிர்ந்து கொண்ட கருத்துகளும் சந்தேகத்தை மேலும் பலப்படுத்தியது. எதுவும் தற்போது பகிர்ந்துகொள்ள முடியாது என்றும், உலகின் உயர்தர சிகிச்சை அவருக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வெறும் அடி வயிறு அறுவை சிகிச்சை என்றால் மாதக் கணக்கில் ஓய்வு தேவையா என்ற கேள்வியும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. காரணம் சமீபத்தில் தான் அரச குடும்பத்தில் இருவருக்கு, மன்னர் உட்பட புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |