பொய் வழக்கில் குற்றஞ்சாட்டிய போது இளவரசி கேட் மிடில்டன் ஆதரவளித்தார்: இந்திய வம்சாவளி பிரித்தானியர் வைத்த கோரிக்கை
பொய்யான திருட்டு வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளி முன்னாள் அஞ்சல் நிலைய அதிகாரி ஒருவர், இதே வழக்கில் சிக்கியுள்ள அனைவரையும் நிரபராதி என்று அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளார்.
கேட் மற்றும் பிப்பா மிடில்டன்
தற்போது 63 வயதாகும் Hasmukh Shingadia என்பவரே பிரித்தானிய மக்களை மொத்தமாக கொந்தளிக்கவைத்த அஞ்சலக பணம் திருட்டு வழக்கில் சிக்கிய சக அதிகாரிகளை குற்றமற்றவர்கள் என அறிவிக்க வேண்டும் என்று கோரியவர்.
Credit: Camera Press
1998ல் இருந்தே கேட் மற்றும் பிப்பா மிடில்டன் ஆகியோருக்கு தமது கடையில் இருந்து இனிப்புகள் வழங்கியுள்ளதாக கூறும் Hasmukh Shingadia, இளவரசர் வில்லியமுடனான திருமணத்திற்கு கேட் தமக்கு அழைப்பிதழ் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இக்கட்டான நேரத்தில் கேட் மிடில்டன் குடும்பம் தமக்கு ஆதரவாக இருந்துள்ளதை குறிப்பிட்ட ஹஸ்முக் ஷிங்காதியா, தவறான தணிக்கை காரணமாக தாம் நடத்திவந்த அஞ்சலகத்தில் இருந்து 16,000 பவுண்டுகள் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 2021 ஜூலை மாதம் அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஹஸ்முக் தெரிவிக்கையில், கேட் மற்றும் அவரது சகோதரி தொடர்ந்து தமது கடைக்கு வந்து பணத்தை செலவழித்தனர் என்றும், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகும் கேட் பலமுறை தமது கடைக்கு வந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Credit: Dan Charity
தற்போது பிரதமர் ரிஷி சுனக்கிடம் கோரிக்கை வைத்துள்ள ஹஸ்முக், 2000-2015 வரை தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து 736 துணை போஸ்ட் மாஸ்டர்களின் தண்டனையும் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும் என்றார்.
கேட் குடும்பத்தினரிடம் உதவி கோரவில்லை
ஹஸ்முக் மற்றும் சந்திரிகா தம்பதி 2011ல் கேட் - வில்லியம் தம்பதியின் திருமணத்தில் கலந்து கொண்ட 83 நாட்களுக்கு பின்னர் ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றம் அவருக்கு எட்டு மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட தண்டனை வழங்கியது.
அத்துடன் 2,000 பவுண்டுகளுக்கு மேல் செலவுகளுக்கான தொகையை செலுத்தவும் 200 மணிநேர சமூக சேவை செய்யவும் உத்தரவிடப்பட்டது. அந்த நாட்கள் மிகவும் கொடூரமானவை என நினைவுகூர்ந்துள்ள ஹஸ்முக், தனக்கு மட்டுமல்ல மொத்த குடும்பமும் நரக வேதனை அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
@getty
தற்கொலை செய்து கொள்ளவும் முடிவெடுத்ததாக கூறும் அவர், தற்போதும் அந்த நினைவுகளால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த நெருக்கடியான தருணத்திலும், கேட் மிடில்டன் குடும்பத்தினரிடம் உதவி கோரவில்லை என்றும், தாம் நிர்பராதி என்று அறிவிப்பு வெளியான பின்னர் ஒருமுறை கேட் மிடில்டனின் சகோதரர் நேரில் வந்து விசாரித்து ஆறுதல் கூறியதாக ஹஸ்முக் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |