பிரித்தானிய மகாராணியாரின் மறைவால் இளவரசர் வில்லியம் மனைவியின் பெயரில் ஏற்பட்டுள்ள மாற்றம்
மகாராணியாரின் மறைவுக்குப் பின் இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட்டை, வித்தியாசமாக அழைக்கத் துவங்கியுள்ளன ஊடகங்கள்.
தற்போது அவர் வெறும் இளவரசர் வில்லியமுடைய மனைவி அல்ல, வேல்ஸ் நாட்டின் இளவரசி.
பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியான கேட் மிடில்ட்டனை, ஊடகங்கள் இப்போது கேத்தரின் என அழைக்கத் துவங்கியுள்ளதைக் கவனித்தீர்களா?
அதற்குக் காரணம், தற்போது அவர் வெறும் இளவரசர் வில்லியமுடைய மனைவி அல்ல. வேல்ஸ் நாட்டின் இளவரசி.
ஆகவே, மகாராணியாரின் மறைவுக்குப் பின் இளவரசர் சார்லஸ் மன்னராக, அவர் வகித்த வேல்ஸ் இளவரசர் என்னும் பட்டம் அவரது மூத்த மகனான வில்லியமை வந்து சேர, இப்போது கேட் மிடில்ட்டன், கேத்தரின்: வேல்ஸ் இளவரசி என அழைக்கப்படுகிறார்.
வேல்ஸ் இளவரசி என்பது சாதாரண ஒரு பட்டம் அல்ல. அதை முன்பு வகித்தவரும் சாதாரணமான ஆள் அல்ல. இதற்கு முன் வேல்ஸ் இளவரசியாக இருந்தவர், சார்லசின் மனைவியான இளவரசி டயானா.
உலகில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்டவர் என அழைக்கப்படும் டயானாவின் வேல்ஸ் இளவரசி என்னும் பட்டத்தை, அவர் இறந்த பிறகு கூட, சார்லசை திருமணம் செய்தாலும் அவரது இரண்டாவது மனைவியான கமீலா பயன்படுத்தவில்லை. ராஜகுடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்தாலும், மக்கள் டயானா மீது வைத்திருந்த அன்பும், பரிதாபமும், கமீலா வேல்ஸ் இளவரசி என்ற பட்டத்தைப் பயன்படுத்தியிருப்பாரேயானால், அவர் மீது எதிர்மறையான பாதிப்பைக் கூட ஏற்படுத்திருயிருக்கக்கூடும்.
GETTY IMAGES
ஆக, கமீலா வேல்ஸ் இளவரசரான சார்லசை மணந்தாலும், அவர் வேல்ஸ் இளவரசி என அழைக்கப்படவேயில்லை.
ஆக, மகாராணியாரின் மறைவுக்குப் பின், அந்த பட்டம் , டயானாவிடமிருந்து தற்போது வேல்ஸ் இளவரசராகியிருக்கும் வில்லியமுடைய மனைவியான இளவரசி கேட்டை, அதாவது கேத்தரினை வந்தடைந்துள்ளது.
GETTY IMAGES
இளவரசி கேத்தரினுடைய முழுப்பெயர், கேத்தரின் எலிசபெத் மிடில்ட்டன் (Catherine Elizabeth Middleton) ஆகும்.
இளவரசி டயானாவைப்போல உயர் குலத்தில் பிறக்காமல், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த கேத்தரின், இப்போது வேல்ஸ் இளவரசி ஆகியிருக்கிறார்.
வேல்ஸ் இளவரசி கேத்தரின், வருங்கால மன்னரின் (இளவரசர் வில்லியம்) மனைவி மட்டுமல்ல, வருங்கால மன்னரின் (இளவரசர் ஜார்ஜ்) தாய் என்னும் பெருமைகளுக்கும் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
GETTY IMAGES
GETTY IMAGES