மேகனின் அவமதிப்பை பார்த்துக்கொண்டு இனியும் சும்மா இருக்கமாட்டார் இளவரசி கேட்: திருப்பியடிக்கத் திட்டம்
தன்னையோ தன் குடும்பத்தையோ மேகன் அவமதிப்பதைப் பார்த்துக்கொண்டு இனியும் கேட் சும்மா இருக்கமாட்டார் என்றும், இனி அவர் திருப்பி அடிப்பார் என்றும் கூறியுள்ளார் பிரித்தானிய பிரபலம் ஒருவர்.
எப்போதுமே, அமைதியானவர், இனிமையானவர் என்று அழைக்கப்படும் இளவரசி கேட், ஹரி மேகனின் ஓபரா பேட்டிக்குப் பிறகு முற்றிலும் மாறிவிட்டார் என்றும், அவர் இப்போது பதிலடி கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பிரபல நகைச்சுவையாளரான Jenny Eclair.
கேட் மேகனுக்கு இடையிலான உரசல் குறித்து பேசிய Jenny, இனி தன்னையோ, தன் கணவர் மற்றும் குழந்தைகளையோ யாரும் அவமதிப்பதைப் பார்த்துக்கொண்டு கேட் சும்மா இருக்கப்போவதில்லை என்றும் சரியான பதிலடி கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஓபரா பேட்டிக்குப்பின் கேட்டும் வில்லியமும் ராஜ குடும்பத்தின் மற்றொரு முகத்தைக் காட்டத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார் Jenny. நாம் நினைத்தது போல் இல்லை, கேட் மிகவும் உறுதியானவர் என்கிறார் அவர்.