ராசியில்லாத வீட்டை மாற்றிய இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர்
பிரித்தானிய இளவரசர் வில்லியம் குடும்பம் வேறு வீடு மாறுவதாக தகவல்கள் வெளியானவண்ணம் இருந்த நிலையில், அவர்கள் ஏற்கனவே வீடு மாற்றிவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீட்டை மாற்றிய இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர்
இளவரசர் வில்லியம் குடும்பம் 2022ஆம் ஆண்டு முதல் Adelaide Cottage என்னும் வீட்டில் தங்கியிருந்தார்கள்.
அவர்கள் விண்ட்சர் எஸ்டேட்டிலுள்ள Forest Lodge என்னும் வீட்டுக்கு மாறப்போவதாக செய்திகள் வெளியாகிவந்தன.

PA
இந்நிலையில், அவர்கள் ஏற்கனவே Forest Lodge வீட்டுக்கு மாறிவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
தங்கள் வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும், வில்லியம் கேட் தம்பதியர் சிறிய பார்ட்டி ஒன்று வைத்துள்ளார்கள்.
ராசியில்லாத வீடு
வில்லியம் கேட் தம்பதியர், Adelaide Cottageஇலிருந்து Forest Lodgeக்கு மாறியதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.

PA
Adelaide Cottage ராசியில்லாத வீடு, சொல்லப்போனால், சபிக்கப்பட்ட வீடு என வில்லியம் கூறுவதுண்டாம்.
அதற்குக் காரணம் என்னவென்றால், வில்லியம் குடும்பம் 2022ஆம் ஆண்டு ஆகத்து மாதம் Adelaide Cottageக்கு குடிபோனநிலையில், செப்டம்பர் மாதம் எலிசபெத் மகாராணியார் மரணமடைந்தார்கள்.
அடுத்த சில மாதங்களில், ஹரி மேகன் தம்பதியர் ராஜகுடும்பத்துக்கு எதிராக கொடுத்த பேட்டியும், ஹரியின் ஸ்பேர் புத்தகமும் வெளியாகின.
2024ஆம் ஆண்டு மன்னருக்கும் இளவரசி கேட்டுக்கும் புற்றுநோய் கண்டறியப்பட, மொத்த குடும்பமும் மிரண்டே போனது.
ஆக, Adelaide Cottage பல மோசமான நினைவுகளுடன் தொடர்புடையதாக இருந்ததால் அந்த வீட்டை விட்டுவிட்டு ஒரு புதிய வீட்டில் ஒரு புதிய வாழ்வைத் துவங்க வில்லியம் குடும்பம் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், Adelaide Cottageஐ புதுப்பிப்பதற்கான செலவுகளை வில்லியம் கேட் தம்பதியரே ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அந்த வீட்டுக்கு அவர்கள் இன்றைய சந்தை நிலவரப்படி வாடகை கொடுக்கவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 AP