இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் வெளியான மிக முக்கிய தகவல்
முழுமையாக குணமடையவில்லை என்ற போதும் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பொது வாழ்க்கைக்கு திரும்ப இருப்பதாக பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் அறிவித்துள்ளார்.
மகிழ்ச்சித் தகவல் ஒன்று
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் Trooping the Colour கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக மகிழ்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தாம் மேற்கொண்டுவரும் சிகிச்சையால் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால், முழுமையாக குணமடையவில்லை என்றும் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் தமது புற்றுநோய் தொடர்பில் தகவல் பகிர்ந்துகொண்டு பிரித்தானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கேட் மிடில்டன், முதல் முறையாக தற்போது இதயப்பூர்வமான தகவல் ஒன்றை நாட்டு மக்களிடம் பகிர்ந்துள்ளார்.
வாழ்க்கையில் நல்ல நாட்களையும் மோசமான நாட்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கேட் மிடில்டன், தமது புற்றுநோய் சிகிச்சையானது பல மாதங்கள் நீடிக்கும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
கேட் மிடில்டன் பங்கேற்பார்
சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் மன்னரின் பிறந்தநாள் விழாவில் கேட் மிடில்டன் பங்கேற்பார் என்பதை அரண்மனை வட்டாரங்களும் தற்போது உறுதி செய்துள்ளது.
இதனால் கேட் மிடில்டன் பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் குடும்ப உறுப்பினர்களுடன் காணப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு, கேட் மிடில்டன் அவரது ஆதரவாளர்களையும் அமைதிப்படுத்தியுள்ளார் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |