குடும்ப உறவினர் ஒருவரிடமிருந்து விலகியிருக்கும் இளவரசி கேட்
Kate and Pippa haven't been pictured together for two years: இளவரசி கேட்டும் அவரது தங்கையான பிப்பா மிடில்டனும் இணைந்து காணப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆவதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் பாதித்த விடயம் குறித்து சமீபத்தில் ஆவணப்படம் ஒன்று வெளியானது.
அத்துடன், இளவரசி கேட் மூன்று சிகரங்கள் ஏறும் சவாலை எதிர்கொண்டு வெற்றிகரமாக முடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், இளவரசி கேட், வில்லியம், தம்பதியரின் பிள்ளைகளான ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ், கேட்டின் பெற்றோர் மற்றும் அவரது தம்பி ஜேம்ஸ் ஆகியோர் இருந்தார்கள்.

முக்கியமான ஒரு நபர் அந்த புகைப்படத்திலும் இல்லை, கேட்டின் ஆவணப்படத்திலும் இல்லை. அவர், கேட்டின் தங்கையான பிப்பா மிடில்டன்!
தங்கையிடமிருந்து விலகியிருக்கும் இளவரசி கேட்?
2024ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பாடல்கள் நிகழ்ச்சி ஒன்றில் இளவரசி கேட்டு, அவரது மகளான சார்லட்டும் பிப்பாவும் இணைந்து பங்கேற்றார்கள்.

அதற்குப் பிறகு எந்த நிகழ்ச்சியிலும் இருவரும் சேர்ந்து பங்கேற்கவேயில்லை!
ஆக, இளவரசி கேட் தங்கையிடமிருந்து விலகியிருப்பதாக செய்திகள் பரவிவரும் நிலையில், மிடில்டன் குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்த செய்தியை மறுத்துள்ளார்.
இந்நிலையில், இளவரசி கேட்டின் வாழ்க்கை, ஒரு வருங்கால ராணியாகவும், வருங்கால மன்னரின் தாயாகவும், அது தொடர்பான விடயங்களை சுற்றி நடந்துகொண்டிருக்க, அவரது தங்கையான பிப்பாவோ இந்த விடயங்களிலிருந்தெல்லாம் விலகி, தனது குடும்பத்துடன், தனது மூன்று பிள்ளைகளை அமைதியான முறையில் வளர்த்து வருகிறார் என்கிறது டெய்லி மெயில் ஊடகம்.

பிப்பா, இளவரசியான தன் அக்காவை விட்டு தனியாக வாழ்ந்து வந்தாலும், அவரும் சாதாரண வாழ்வை வாழவில்லை. அவர் 145 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, 15 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய, 32 அறைகள் கொண்ட ஒரு மாளிகையில்தான் தன் குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார்.
அத்துடன், பிப்பாவின் கணவரின் சொத்துக்களையும் சேர்த்து, அவர்களுடைய குடும்பத்தின் சொத்து மதிப்பு, இளவரசர் வில்லியம் வைத்திருக்கும் Duchy of Cornwall என்னும் எஸ்டேட்டிலிருந்து கிடைக்கும் வருவாயை விட அதிகமாக இருக்கக்கூடும் என்கின்றன பிரித்தானிய ஊடகங்கள்.