ஹரி மேகன் பிரிவை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடும் இளவரசி கேட்?
தன் கணவரான இளவரசர் வில்லியமையும், அவரது தம்பியான இளவரசர் ஹரியையும் ஒன்றுசேர்க்க இளவரசி கேட் முயற்சி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரி மேகன் பிரிவை பயன்படுத்திக்கொள்ள திட்டம்
இளவரசர் வில்லியமையும், இளவரசர் ஹரியையும் ஒன்றுசேர்க்கும் முயற்சியில் இளவரசி கேட் ஈடுபட்டுள்ளதாகவும், ஹரியும் மேகனும் பிரிவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சகோதரர்களை ஒன்றிணைக்க அவர் முயற்சி மேற்கொண்டுவருவதாகவும் கேட்டுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், ஹரி உண்மையாகவே மாறிவிட்டார் என்பது உறுதியானால் மட்டுமே தான் தன் சகோதரனுடன் சமாதானம் செய்துகொள்வது குறித்து யோசிக்க இருப்பதாக வில்லியம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஹரி தன் குடும்பத்துடன் ஒன்றுசேர்வதில் மேகனுக்கும் சம்மதம்தான் என்றும், ஆனால், அதற்காக, தன்னை ஓரங்கட்ட மேகன் அனுமதிக்கமாட்டார் என்றும் தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேகன் தரப்பில், இளவரசர் வில்லியமானாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, தனக்கும் ஹரிக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்த யாரையும் விடப்போவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |