வில்லியம் மீதான காதலை முதன்முறையாக தாயாரிடம் கூறிய கேட் மிடில்டன்... பின்னர் நடந்த சுவாரசிய சம்பவம்
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியின் திருமணமானது 2011ல் நடந்தது
திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதை கேட் முதன்முறையாக தாயாரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மீதான காதலையும் அவரை திருமணம் செய்யவிருப்பதையும் கேட் மிடில்டன் தமது தாயாரிடம் முதன்முறையாக வெளிப்படுத்திய போது நேர்ந்த சுவாரசிய சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியின் திருமணமானது லண்டனில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் கடந்த 2011ல் நடந்தது. தற்போது வேல்ஸ் இளவரசராக புதிய பட்டம் பெற்றுள்ள வில்லியம்- கேட் தம்பதிக்கு ஜோர்ஜ், லூயிஸ் மற்றும் சார்லோட் என மூன்று பிள்ளைகள்.
@getty
பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்த காலகட்டத்தில் தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. மட்டுமின்றி, அரண்மனை கட்டுப்பாடுகளை மதித்து நடந்துவரும் வில்லியம், தமது காதலியான கேட் மிடில்டனை பல்கலைக்கழக பட்டம் பெற்ற பின்னரும் தொடர்ந்து ரகசியமாக சந்தித்தே வந்துள்ளார் என கூறப்படுகிறது.
ஆனால் திடீரென்று இருவரும் சந்திக்காமல் நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே வில்லியம் கென்யாவில் இருந்து திரும்பிய பின்னர் கேட் மிடில்டனின் தந்தையிடம் தான் தமது விருப்பத்தை முதன்முறையாக வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி கென்யாவில் இருந்து திரும்பிய பின்னர் வில்லியம் மீதான காதலையும் அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதையும் கேட் மிடில்டன் முதன்முறையாக தமது தாயாரிடம் தான் வெளிப்படுத்தியுள்ளார்.
வில்லியம் ஏற்கனவே தமது தந்தையிடம் அனுமதி பெற்றுள்ளதையும், அவர் தமது மனைவியிடம் மகள் தொடர்பில் கூறியிருப்பாரா என்பது உறுதியாக தெரியாததாலும், கேட் மிடில்டன் தமது தாயாரிடம் வெளிப்படையாக பேசியுள்ளார்.
@PA
ஆனால் தாயாரின் முகத்தில் எந்த சலனமும் இல்லாதது கண்டு, மிகவும் சங்கடமாக உணர்ந்துள்ளார் கேட் மிடில்டன். இதை கேட் மிடில்டனே ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுவாக எந்த தாயாரும் தமது மகள் ராஜகுடும்பத்தில் மருமகளாக செல்ல இருப்பதை அறிந்து குதூகலமடைவார்கள். ஆனால் தமது தாயார் எந்த சலனமும் இல்லாமல் காணப்பட்டது தம்மை ஒருநொடி சங்கடப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கென்யாவில் வைத்து தான் இளவரசர் வில்லியம் கேட் மிடில்டனிடம் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தை முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் தான் கேட் மிடில்டனின் தந்தையிடம் முறைப்படி அனுமதி கோரியுள்ளார் இளவரசர் வில்லியம்.