மேகன் மீது நம்பிக்கையில்லை! அவர் மீது சக அரச குடும்ப மருமகள் கேட் மிடில்டனுக்கு இருந்த பயம்.. புகைப்படங்கள்
மேகனிடம் இருந்து கேட் மிடில்டன் விலகி செல்லவே விரும்பினார் என கூறும் அரச குடும்ப வர்ணனையாளர்.
மேகன் மீது ஒரு வித பயம் அவருக்கு இருந்ததாகவும் கூறுகிறார்.
மேகன் மெர்க்கல் மீதான கேட் மிடில்டனின் பயம் அவர் உடல் மொழி மூலம் தெளிவாக தெரிந்ததாக அரச குடும்ப வர்ணனையாளர் நீல் சீன் தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட யூ டியூப் சேனலில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நீல் சீன் கூற்றுபடி கேட் மிடில்டனின் மேகன் மெர்க்கல் மீதான பயம் சமீபத்தில் நடைபெற்ற ராணியாரின் இறுதி நிகழ்வின் போது வெளிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மேகனிடமிருந்து விலகி செல்லவே கேட் விரும்பினார், இதற்கான சில புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். மேகனிடம் எந்தவொரு விடயத்தை சொல்ல கேட் விரும்பவில்லை மற்றும் பயமும் இருந்திருக்கிறது.
Getty Images
ஏனெனில் அவருக்கு மேகன் மீது நம்பிக்கையில்லை. மேகனிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என கேட் நினைத்ததற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. ஏனெனில் எந்த விடயத்தை பற்றி பேசினாலோ அல்லது விவாதித்தாலோ கூட அது வெளியில் கசியும் என கேட் உணர்ந்திருந்திருந்தார் என தெரிவித்துள்ளார்.
AP