கேட் மிடில்டனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெண்மணி...அயர்லாந்து ஐரிஷ் மக்களுக்கே என அறிவிப்பு: வீடியோ
வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் வேல்ஸ் இளவரசி கேட் வடக்கு அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம்.
அயர்லாந்து ஐரிஷ் மக்களுக்கே சொந்தம் என இளவரசி கேட் மிடில்டனை எதிர்கொண்ட பெண்மணி பேச்சு.
வடக்கு அயர்லாந்தில் பொதுமக்களுடன் கைகுலுக்கிய போது பெண்மணி ஒருவர் "நீங்கள் உங்களது சொந்த நாட்டில் இல்லை" என வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனிடம் தெரிவித்தார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து, நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்று கொண்டார்.
Kate Middleton was told 'Ireland belongs to the Irish' by a member of the public during a visit to Belfast ? pic.twitter.com/wH5jntiODY
— The National (@ScotNational) October 6, 2022
இதன் தொடர்ச்சியாக மன்னரின் மூத்த மகன் வில்லியம் வேல்ஸின் புதிய இளவரசராக அறிவிக்கப்பட்டார்.
ராணியின் துக்கம் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் அரசுமுறை சுற்றுப்பயணமாக வடக்கு அயர்லாந்திற்கு சென்று இருந்தனர்.
வடக்கு அயர்லாந்தின் வடக்கு பெல்ஃபாஸ்டில் உள்ள தற்கொலை தடுப்பு தொண்டு நிறுவனமான PIPSக்கு சென்ற இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் அங்கு நடைபெற்ற கலை சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து Co Antrim நகரில் வரிசையில் காத்து இருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது இளவரசி கேட் மிடில்டனை எதிர்கொண்ட பெண்மணி ஒருவர் “தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, இருப்பினும் இது உங்கள் சொந்த நாட்டில் இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்” என தெரிவித்தார்.
கையில் உள்ள கைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்த அந்த பெண்மணி மேலும் அயர்லாந்து ஐரிஷ்(Irish) மக்களுக்கே சொந்தமானது எனவும் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: இளவரசி மேகன் நிர்வாண ஸ்பாவில் இளம் வயதில் சந்தித்த சங்கடம்: தாழ்மையான அனுபவம் என தகவல்
அயர்லாந்தின் தெற்கு பகுதி குடியரசு அயர்லாந்து-ஆக அறிவிக்கப்பட்டது மற்றும் வடக்கு பகுதி அயர்லாந்து பிரித்தானியாவின் ஆளுகைக்குள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.