அறுவை சிகிச்சைக்கு பின் முதல் முறையாக விண்ட்சரை விட்டு வெளியேறிய இளவரசி கேட்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் அறுவை சிகிச்சைக்கு பின் விண்ட்சரை விட்டு வெளியேறியிருப்பதாகவும், அவர் மன்னரை சந்திக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசி கேட் மிடில்டன்
மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது அரச குடும்பத்தினருக்கு கவலையான வாரமாக இருந்தது.
இந்த நிலையில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மன்னரை சந்திக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்னர் திட்டமிட்ட வயிற்று அறுவை சிகிச்சையை கேட் மேற்கொண்டார். அதன் பின்னர் இரண்டு வாரங்கள் லண்டன் கிளினிக்கில் நாட்களை கழித்தார்.
Anmer Hall
தனது அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக கேட் மிடில்டன் விண்ட்சரை விட்டு வெளியேறியுள்ளார்.
(Shirlaine Forrest)
அவர் தனது குடும்பத்தினருடன் சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் உள்ள 10 படுக்கையறைகள் கொண்ட Anmer Hall-யில் தங்குவார் என கூறப்படுகிறது.
Max Mumby/Indiago/Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |