பியானோ வாசித்து அசத்திய பிரித்தானிய இளவரசி!
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவியும், இளவரசியான கேட் வில்லியம் கிறிஸ்துமஸ் கரோல் சர்வீஸில் பியானோ வாசித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் டச்சஸ் கேட் வில்லியம், தனது சிறுவயதில் இருந்தே பியானோ வாசித்து வரும் நிலையில், தனது ராயல் கரோல்ஸ்: டுகெதர் அட் கிறிஸ்துமஸ் (Royal Carols: Together at Christmas) நிகழ்வில், பாடகர் மற்றும் பாடலாசிரியர் டாம் வாக்கருடன் (Tom Walker) இணைந்து For Those Who Can’t Be Here பாடலுக்கு பியானோ வாசித்து அசத்தியுள்ளார்.
இளவரசி கேட் வாசித்ததைப் பாராட்டிய Tom Walker, இளவரசி 'அழகான, கனிவான மற்றும் அன்பான இதயம் கொண்டவர்' என்று விவரித்தார். இந்த நிகழ்ச்சியானது இன்றிரவு ITV-ல் ஒளிபரப்பப்பட்டது.
அவருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி Tom Walker கூறுகையில்: "கிறிஸ்துமஸில் ராயல் கரோல்ஸ்: ஒன்றாக இணைந்து வாசிப்பது உண்மையிலேயே ஒரு மரியாதை. சந்தேகத்திற்கு இடமின்றி, இது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே நடக்கக்கூடிய ஒன்று" என்று அவர் விவரித்தார்.
மேலும், முன் அனுபவம் இன்றி பல இசைக்கலைஞர்களுடன் பின்னணியில் பியானோ வாசிப்பதும், அதனை கமெராவில் லைவாக பதிவு செய்வதும் எளிதானது அல்ல என்று அவர் பாராட்டினார்.
தொற்றுநோய்களின் போது தங்கள் சமூகங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ராயல் கரோல்ஸ்: டுகெதர் அட் கிறிஸ்மஸ் என்ற நிகழ்வை கேட் தொகுத்து வழங்கினார்.
Upcoming Photos Credit: PA



