மன்னர் சார்லஸ் அளிக்கும் கிறிஸ்துமஸ் விருந்தை தவிர்க்க இருக்கும் கேட் - வில்லியம் தம்பதி
மன்னர் சார்லஸ் முன்னெடுக்கும் கிறிஸ்துமஸ் விருந்தில் கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் கலந்துகொள்வதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத்துட கொண்டாட முடிவு
ஆனால் குறித்த விருந்தில் சர்ச்சைக்குரிய அரச குடும்பத்து உறுப்பினர் கலந்துகொள்வார் என்றே கூறப்படுகிறது. புற்றுநோய் பாதிப்பு தொடர்பான கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள கேட் மற்றும் வில்லியம் தம்பதி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை அரச குடும்பத்துட கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
அத்துடன் கேட் மற்றும் வில்லியம் தம்பதி சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் உள்ள செயின்ட் மேரி மாக்டலீனில் முக்கிய கிறிஸ்துமஸ் தின சேவையில் கலந்துகொள்வார்கள். ஆனால் இந்த முறை அரச குடும்பத்தினருடன் சிறப்பு கிறிஸ்துமஸ் விருந்தில் கேட் - வில்லியம் தம்பதி கலந்துகொள்ளாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் தனியாக கிறிஸ்துமஸ் விருந்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். Anmer Hall மாளிகையில் தான் தற்போது கேட் மிடில்டன் ஓய்வெடுத்து வருகிறார்.
கலந்துகொள்வதில்லை
பாரம்பரியமாக, அரச குடும்பத்துக்கான கிறிஸ்துமஸ் விருந்து மற்றும் கொண்டாட்டங்கள் சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் நடத்தப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் முந்தைய நாள் பரிசுகள் பரிமாறப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில், ஒன்று அல்லது இரண்டு தேவலயங்களுக்கு அரச குடும்பத்தினர் செல்வது வழக்கம், தொடர்ந்து மதிய விருந்து, அத்துடன் மன்னரின் பண்டிகை நாள் உரை நிகழ்த்தப்படும்.
இந்த முறை சார்லஸ் மன்னர் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாட இருக்கிறார். ராணியாரும் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளார்.
ஒரே ஒரு குறையாக இந்த ஆண்டு சிறப்பு விருந்தில் கேட் - வில்லியம் தம்பதி கலந்துகொள்வதில்லை என முடிவு செய்துள்ளனர். ஆனால் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவர் முன்னாள் மனைவியும் கலந்துகொள்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |