அந்த ஒரு விடயம்... இளவரசர் ஹரி மீது தீராக் கோபம் வைத்திருக்கும் வில்லியமும் கேட்டும்
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியபின் செய்த செயல்கள் குடும்பத்துக்கே அவமானத்தைக் கொண்டுவந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட விடயம் குறித்து இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் இன்னமும் ஹரி மீது தீராக் கோபம் கொண்டுள்ளதாக ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்
ராஜ குடும்பத்துக்குள் ஹரி மீது பலருக்கு கோபம் உள்ளது என்பது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவருவது உண்மைதான். ஆனால், தனிப்பட்ட முறையில் ஹரி மீது இளவரசர் வில்லியமுக்கு பயங்கர கோபம் உள்ளதாம்.
குறிப்பாக, வில்லியம் தன்னைத் தாக்கியதாக ஹரி கூறிய விடயம் அவரை ஆத்திரப்பட வைத்துள்ளதாம். அத்துடன், இப்படிப்பட்ட தனிப்பட்ட குடும்ப விடயங்களை ஹரி தனது புத்தகத்தில் வெளியிட்டதால் வில்லியம் கடும் கோபம் அடைந்தாராம்.
ஹரி தனது ஸ்பேர் என்னும் புத்தகத்தில், தானும் தன் மனைவி மேகனும் அமெரிக்கா செல்ல முடிவெடுக்கும் முன், தனக்கும் தன் அண்ணன் வில்லியமுக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், அப்போது வில்லியம் தன் மனைவி மேகனை, நாகரீகம் இல்லாதவர், மற்றவர்களைக் குறித்து அக்கறை இல்லாதவர் என்று விமர்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கைகலப்பாக மாறிய வாய்ச்சண்டை
உடனே ஹரி தன் அண்ணன் வில்லியமை, ஊடகங்களில் என் மனைவியைக் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளதை நீ அப்படியே ஒப்புவிக்கிறாய் என்று கூறினாராம். கோபமடைந்த வில்லியம் ஹரியின் சட்டைக் காலரைப் பிடித்து கீழே தள்ளியதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஹரி.
இந்த விடயம் குறித்த கோபம் மட்டும், இளவரசர் வில்லியமுக்கும் அவரது மனைவி மேகனுக்கும் இன்னமும் தீரவில்லை என்கிறார் ராஜ குடும்ப எழுத்தாளரான Tom Quinn என்பவர்.
Image: Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |